Home » எனக்கும் இது முதல் நூறு
மெட்ராஸ் பேப்பர்

எனக்கும் இது முதல் நூறு

வாசகன் சந்திரமௌலியின் வயதில் மூன்றில் இரண்டு பங்கு வயதாகிவிட்டது பத்திரிகையாளன் சந்திரமௌலிக்கு. இக்காலக்கட்டத்தில் இந்தியா முழுவதும் பரவலாகப் பயணித்திருக்கிறேன். குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், பல மாநில முதலமைச்சர்கள் தொடங்கி எத்தனையோ அரசியல்வாதிகள், கலைஞர்கள், வல்லுநர்களைச் சந்தித்து பேட்டி கண்ட அனுபவம் உண்டு. இவை எல்லாமே கல்கி, குமுதம், விகடன், குங்குமம், தினமணி, தினமலர் புதிய தலைமுறை, அமுதசுரபி என்று பெரிய அளவில் வாசகர்களைக் கொண்ட பத்திரிகைகள் மூலமாகக் கிடைத்தவை.

ஆரம்பம் முதலே நான் இரண்டு விஷயங்களைக் கைக்கொண்டு வந்திருக்கிறேன். ஒன்று, எதுவானாலும், பத்திரிகையின் ஆசிரியர் அல்லது உதவி ஆசிரியர்களோடு நேரடியாக – தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டபின் மெயில், வாட்ஸாப் மூலமாக- ஐடியாவைச் சொல்லி அவர்களின் ஒப்புதல் பெற்று வேலையை ஆரம்பிப்பேன். அல்லது “இது பற்றி கட்டுரை வேண்டும்; இவரது பேட்டி வேண்டும்” என்று ஆசிரியர் குழுவில் இருந்து எனக்கு அசைன்மென்ட்கள் கொடுத்தால் எழுதுவேன். காரணம், நானாக எதையாவது எழுதி அனுப்பிவிட்டு அது எப்போது பிரசுரமாகும் என்று காத்திருக்கும் பொறுமை எனக்குக் கிடையாது. இன்னொரு முக்கியமான காரணமும் உண்டு. இந்திய அரசின் மிகப் பெரிய வங்கி ஒன்றில் வேலை பார்த்தபடியே, பத்திரிகைகளுக்கு எழுதிக் கொண்டிருந்ததால், எப்போதுமே நேர நெருக்கடிதான்!

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!