Home » ஐம்பது – எண்பது
உலகம்

ஐம்பது – எண்பது

சகுரா மலர்களுக்கொரு சிறப்பம்சம் இருக்கிறது. ஜப்பானின் தெருக்களை இருவாரங்களுக்கு ‘பேபி பிங்க்’ வண்ணத்தில் திளைக்க வைத்தாலும், இம்மலர்களின் வர்ணம் அதுவன்று. அவை நிறமற்ற கண்ணாடி மலர்கள்! சூரிய ஒளி பட்டுத் தெறிக்கும் விதத்திலேயே அவை இளஞ்சிவப்பாகத் தெரிகின்றன. ஜப்பானை நினைத்தாலே இந்த மெல்லிய மலர்கள் நினைவில் தோன்றுமளவு அந்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒன்றறக் கலந்து விட்டன. வாழ்வு- மரணம் ஆகிய இரு முரண்களை ஒரே நேரத்தில் பிரதிபலிக்கும் பூக்களாக ஜப்பானியர்கள் அவற்றைக் கொண்டாடி மகிழ்கின்றனர். ஆனால் அதே முரண் அவர்களின் வாழ்வியலிலும் கலந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

“வாழ்ந்தா அப்படி வாழணும்டா” என்று பொறாமைப்பட வைப்பவர்கள் அவர்கள். இதற்குப் பிறகு ‘புத்தாக்கம்’ என்ற ஒன்றே இல்லை என்ற அளவுக்கு எல்லா விதத்திலும் முன்னேறிய நாடு ஜப்பான். அங்குள்ளவர்கள் தாம் ‘எதிர்காலத்தில்’ வாழ்வதாகச் சொல்கிறார்கள். மனிதனுக்கு எவ்விதச் சிரமங்களும் கொடுக்காதபடி கைக்கும் காலுக்கும் உபகரணங்களையும் தொழில்நுட்பங்களையும் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் மறுபுறம், பயங்கரமான சில நூதனச் சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறார்கள். அவற்றில் ஒன்று, ‘ஹிக்கிகோமோரி’ எனப்படும், தனிமைச் சாவுகள்!

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!