‘சிப்’புக்குள் முத்து
மின்சாரத்திற்கு முன் – மின்சாரத்திற்குப் பின் என்று மனிதகுல வரலாறை இரண்டாகப் பிரிக்கலாம். மின்சாரம் தொடாத துறைகளே இல்லை. பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகள் நம் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட சிக்கலைத் தீர்க்கும். இதன் மூலம் வாழ்வை எளிதாக்கும். ஆனால் மிகச் சில கண்டுபிடிப்புகளே நாம் வாழும் முறையையே வேறொரு தளத்திற்கு இட்டுச் செல்லும். மின்சாரம் இது போன்ற ஒன்று.
அச்சு இயந்திரங்கள், நீராவி இன்ஜின்கள், டிஜிட்டல் கம்ப்யூட்டர்கள், இண்டர்நெட் போன்றவை நம் வாழ்வின் போக்கை மாற்றிய இன்னபிற தொழில்நுட்பங்கள். இந்த வரிசையில் சமீபத்தில் சேர்ந்துள்ளது ஆர்டிஃபீசியல் இன்டலிஜென்ஸ். செயற்கை நுண்ணறிவு. செய்யறிவு. நாம் எளிதாக ஏ.ஐ என்றே வைத்துக்கொள்வோம்.
தினந்தோறும் புதிதுபுதிதாக ஏ.ஐ. கருவிகள் வந்த வண்ணம் உள்ளன. நேற்றுவரை எவற்றையெல்லாம் நாம் சாத்தியமே இல்லை என்று நம்பினோமோ, அவற்றில் பலவும் இன்று சாத்தியங்களாக மாறியுள்ளன. இன்று எவை இயலாதவையோ அவை நாளை இயலக்கூடும். இந்த aIm It தொடர் முழுவதும், அன்றலர்ந்த ஏ.ஐ. முன்னேற்றங்களை எளிதாக விளக்கத் திட்டமிட்டுள்ளோம்.
சுவாரஸ்யம், எளிமை கலந்த எழுத்து. அருமை. வாழ்த்துகள்
இந்த தொடரில் அறிமுகமான போட்ரைட் தளத்தில் சென்று எனது வான்கா புகழ் சுயமியை பெற்றேன். நல்ல தொடர்.. புதிதாக நிறைய விசயங்களை கற்றுக்கொள்ளவும் இந்த தொடர் பயனுள்ளதாக இருக்கும். தொடருங்கள் Ai(m) தொடரை…!
இக்காலத்துக்கு மிக அவசியமான தொடர். அருமை.