ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அப்பழமொழியின் தமிழ் மொழிபெயர்ப்பு “ரோம் நகரம் ஒரு நாளில் கட்டப்படவில்லை”. பிரமாண்டமான எதையும் குறுகிய காலத்தில் உருவாக்க முடியாது என்பதே இதன் அர்த்தம். இப்பழமொழி உலகில் உருவாக்கப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் பொருந்தும்.
இன்று நாம் சர்வ சாதாரணமாகத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அவை உருவாவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகின, எத்தனைப் பேரின் உழைப்பு அதன்பின் இருந்திருக்கும் என்பதை நாம் சிந்திப்பதில்லை.
எந்தத் துறையானாலும் ஒரு புதிய தொழில்நுட்பம் பரவலாக அறிமுகமாவதற்கு முன்னர் பல ஆண்டுகள் பல தொழில்நுட்ப வல்லுனர்களால் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசாங்கங்கள் மட்டுமல்லாது தனியார் நிறுவனங்களும் ஆய்வுக்காகக் கணிசமான அளவு பணத்தைச் செலவிடுகிறார்கள். இப்படிச் செய்யப்படும் அனைத்து ஆய்வுகளும் பிரபலமாகும் ஒரு கண்டுபிடிப்போடு முடிவதில்லை. இவற்றில் பல வெற்றி பெறாமல் கைவிடப்படுவதுமுண்டு. இப்படிக் கைவிடப்படும் பல முயற்சிகளைப் பொதுமக்கள் அறிந்திருப்பதில்லை.
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்…