ரஷ்யா – உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளாக உச்சத்தில் இருக்கிறது. மேற்காசியப் பகுதியில் உருவாகிய போர், வளர்ந்துகொண்டே போகிறது. பொதுவாக, போர்க் காலத்தில் உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும். அதுவும் ஆசியக் கண்டத்தில் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று என்ற கணக்கில் போர்கள் அதிகரிக்கின்றன. இந்த நேரத்தில் வளரும் நாடுகள் எச்சரிக்கையாக இருப்பது நன்று. புத்திசாலி நாடுகள் எச்சரிக்கையையும் தாண்டி போர்க்களத்தில் ஒரு புது வாய்ப்பை கண்டுபிடிக்கும். அதைத்தான் இன்று இந்தியா செய்கிறது.
ஆம், இந்தியா தனது பாதுகாப்பு இணைப்புகளை (defence attaches) ஆர்மேனியா, பிலிப்பைன்ஸ், போலந்து மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளில் பரப்பி உள்ளது. ராணுவம், கடற்படை, விமானப் படையில் உள்ள பதினாறு பிரதிநிதிகளை புதிய பொறுப்புக்கு நியமித்துள்ளது. இந்தப் புதுப் பாதுகாப்பு இணைப்புகள், பாதுகாப்பு ஒப்பந்தங்கள், பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏற்கனவே இருந்த சில அமெரிக்க, ரஷ்யப் பிரதிநிதிகளையும் இடம் மாற்றச் செய்திருக்கிறது இந்தியா.
சரி, இந்தியா ராணுவ உற்பத்தியைப் பெருக்குவது என்ற நோக்கத்துடன் உள்ளது. ஏன் இந்த சில நாடுகளை மட்டும் தேர்வு செய்ய வேண்டும்?
Add Comment