இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ் காலமானார். அவர் கண்டுபிடித்த ஹிக்ஸ் போசான் என்ற துகள், காலத்தால் அழியாதது. கடவுளும் இயற்பியலும் இருக்கும்வரை இருக்கப் போவது. எத்தனையோ நவீன ஆய்வுகளுக்கு அடித்தளம் அமைத்துத் தரப்போவது.
பீட்டர் ஹிக்ஸ், இங்கிலாந்தில் பிறந்தவர். அவரது தந்தை தாமஸ் வேர் ஹிக்ஸ், பிபிசியில் சவுண்ட் எஞ்சினீயராக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அமைதியான வாழ்வெல்லாம் இரண்டாம் உலகப் போர் தொடங்கும் வரைதான். போர் சூடு பிடிக்கத் தொடங்கியதும் ஹிக்ஸின் குடும்பம் நாளுக்கொரு இடம் மாறிக்கொண்டே இருந்தது. ஒரு வழியாக ப்ரிஸ்டோலுக்கு வந்து ஒரு மாதிரி செட்டில் ஆனார்கள். அங்கு பால் டிராக் என்ற புகழ் பெற்ற இயற்பியலாளர் படித்த காத்தம் க்ராமர் பள்ளியில் படித்தார் பீட்டர். அப்போது ஆரம்பித்தது இயற்பியலின் மீதான அவரது ஆர்வம். பட்ட மேற்படிப்பு வரை இயற்பியலைப் படித்த அவர், தன் தனது டாக்டர் பட்ட ஆய்வை மாலிக்குலர் பிஸிக்ஸில் செய்தார். அப்படியொரு சூழல் அமைவது அபூர்வம். அவர் படித்த காலம் முழுதும் இங்கிலாந்தின் புகழ்பெற்ற இயற்பியலாளர்களை நேரில் சந்திக்கவும் பழகவும் உரையாடவும் இயல்பாக அவருக்கு வாய்ப்புகள் அமைந்தன. எதையும் விடாமல் பயன்படுத்திக்கொண்டதுதான் அவரது சிறப்பு.
இக்கட்டுரையை புரிந்துகொள்ளும் அளவு இயற்பியல் அறிவு எனக்கு இன்னும் வரவில்லை.
புலிக்கு பிறந்தது பூனையாகுமா?
அருமை. பாரதி பாப்பாவிற்கு பாராட்டு.
இன்று மீண்டும் படித்தேன். என் அறிவுக்கு ஏதோ கொஞ்சம் புரிகிறது. தமிழில் முதல் கட்டுரையாமே உங்களுக்கு? எழுத்துநடை அபாரம். வாழ்த்துகள்
எனக்கு புரிந்து கொள்ள கொஞ்சம் கடினமான சப்ஜட் தான்.சிறிய வயதிலேயே பாரதியின் ஞானம் நன்கு புரிகிறது.கட்டுரையின் பொருள் மற்றும் எழுதிய தெளிவு வியக்க வைக்கிறது.வாழ்க..வளர்க..
எளிமையான நல்லதொரு விள்ளக்கப் பதிவு. ஆங்கிலத்திலேயே உழன்று கொண்டிருக்கும் வாழ்க்கை நடுவே ‘துகள்’, ‘களம்’ போன்ற வரையறைகள் அருமை. ஒரே ஒரு வேண்டுகோள். இதன் நீட்சியாக ஹிக்ஸ் போஸான் இல் உள்ள ‘போஸான்’ னுக்கு சொந்தக்காரர் ஆன சத்யேந்திரநாத் போஸ் பற்றியும் ஒரு கட்டுரை எழுதுங்களேன்