Home » ஆபீஸ் – 96
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 96

96 சாமானியன்

பட்டையான கறுப்பு ஃபிரேம் போட்ட சோடாபுட்டி கண்ணாடியுடன் குண்டாகக் குள்ளமாய் சின்ன கறுப்பு மூட்டை போல இருப்பார் சுந்தா. கூர்கியான குஷாலப்பாவும் கறுப்புதான். ஆனால் கிரிக்கெட் வீரர் என்பதால் நன்கு உயரமும் அகன்ற மார்பும் திடமான தோள்களுமாய் முதல் பார்வைக்கே ‘அட யாரிது’ என்று பார்க்கவைக்கும்படி இருப்பார். திலீப்பும் ஹாக்கி பிளேயர்தான் என்றாலும் குஷாலப்பா அளவுக்கு உயரமுமில்லை சுந்தா அளவுக்குக் குண்டுமில்லை. தெலுங்கு ஐயர் என்றாலும் மோகன் அளவுக்கு நிறமுமில்லை. பாடி பில்டர் மாதிரி கைகள் கண்ணுக்குத் தெரியாத ஸ்டாண்டில் பொருத்தப்பட்டிருப்பதைப்போல நடந்து வருவதில் ஒன்றும் குறையுமில்லை. காதலித்துக்கொண்டிருந்தது முறைப்பெண் என்பதால் எங்கையும் வரமாட்டேங்கறா, இன்னைக்குக் கபாலி கோவில் போய்ட்டு வந்தோம் என்றோ போகணும் என்றோ சொல்லிப் புலம்பிக்கொண்டிருப்பான். மோகனைப் போலவே இஸ்மாயிலும் பிறந்து வளர்ந்ததெல்லாம் ஐஸ்ஹவுஸ் பக்க திருவல்லிக்கேணிதான் என்றாலும் தூரதேசத்திலிருந்து அப்போதுதான் வந்து இறங்கியதைப்போல ஆங்கிலம் கலந்து கொச்சையாகத் தமிழ் பேசுவார். அவன் அதுவரை பார்த்திருந்த முஸ்லிம்கள் எல்லாம், கம்பன் கழக நீதிபதி மு மு இஸ்மாயிலில் இருந்து மார்க்சிய லெனினிய ப்ரைவேட் லிமிடெட் இன்குலாப் வரை யாருமே கறுப்பில்லை. மனைவி தவறிவிட்டதைச் சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்ட பஞ்சாங்கம் தமிழெடுக்க வருவதற்கு முன்னால், காரைக்காலுக்கு மாற்றலாகும்வரை தாகூர் கலைக்கல்லூரியில் பியூஸியில் தமிழ் எடுத்த சாயபு மரைக்காயர்கூடக் கறுப்பில்லை. உருது பேசும் முஸ்லிமாக இருந்தும் இஸ்மாயில் கறுப்பாக இருப்பதைப் பார்க்கக் கொஞ்சம் வியப்பாக இருந்தது. எப்போதும் ஐந்து பேருமே இருந்துகொண்டிருப்பதால் கலகலவென்று இருக்கிற ரேஞ்சில் அன்று சுந்தாவைத் தவிர யாருமே இல்லாததும் வேறு ஆச்சரியமாக இருந்தது.

‘என்ன யாரையுமே காணம். நீங்க மட்டும் இருக்கீங்க.’

‘குஷாலப்பா லீவு. ஊருக்குப் போயிருக்காரு. திலீப்புக்கு மேட்ச்சு. மோகனும் இஸ்மாயிலும் ஃபேக்டரிக்குப் போயிருக்காங்க.’

எல்டிசிதானே என்று நினைக்காமல் எல்லோரையும் போல அவனையும் மதித்துப் பேசுகிற குணமும் எப்போதும் குறும்பாகப் பேசுகிற தன்மையும் இருப்பதால்தான் எடுத்ததுமே ஈர்க்கிறவராக இல்லாவிட்டாலும் சுந்தாவுக்கு இத்தனை நண்பர்கள் இருக்கக் காரணமாக இருக்கவேண்டும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!