Home » சத்யா நாதெல்லா: ரகசியம் என்பது கிடையாது!
ஆளுமை

சத்யா நாதெல்லா: ரகசியம் என்பது கிடையாது!

ஐதராபாத்தில் ஒரு சிறிய கிரிக்கெட் மைதானம். இரு அணிகளுக்கு இடையேயான பரபரப்பான ஆட்டம். அடுத்தடுத்து ‘நான்கு’ மற்றும் ‘ஆறு’ என ரன்கள் அதிகமாகிக்கொண்டே போக, பந்து வீச்சாளர் சொதப்புகிறார் என மைதானத்தில் முணுமுணுப்புகள். கேப்டன், அந்த பந்து வீச்சாளரிடமிருந்து பந்தை வாங்கி தானே பௌலிங் போடுகிறார். அடுத்த சில பந்துகளில் எதிரணியின் முக்கிய பேட்ஸ்மேன் ஆட்டமிழந்ததும், அந்தப் பந்து வீச்சாளரை அழைத்துத் திரும்பவும் பந்துவீசச் சொல்கிறார். அதன் பிறகு தனது துல்லியமான பந்துவீச்சால் எதிரணியின் ஸ்கோரை கட்டுப்படுத்திவிடுகிறார் அந்த பௌலர்.

ஆட்டம் முடிந்ததும், அந்தப் பந்துவீச்சாளர் கேப்டனிடம் சென்று “இன்றைக்கு எனக்குச் சரியான நாள் இல்லை, இருப்பினும் ஏன் மீண்டும் பௌலிங் வாய்ப்பு தந்தீர்கள்?” எனக் கேட்டார். “இந்தத் தொடர் முழுவதும் நீ எனக்குத் தேவை, ஒரு நாளின் மோசமான ஆட்டத்திற்காக உன்னுடைய நம்பிக்கையை நான் உடைக்க விரும்பவில்லை” என்றார் அந்த கேப்டன்.

இரண்டாம் வாய்ப்பின் மூலம் தனது திறமையைக் காட்டிய அந்த பௌலர் தான், இன்று உலகின் மிகப்பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் தலைமை செயல் அதிகாரி, சத்யா நாதெல்லா.

தனது இளமைக்கால கிரிக்கெட் அனுபவங்கள் மறக்கமுடியாத தலைமைப் பண்புகளைக் கற்றுக்கொடுத்ததாக இப்போதும் சொல்லுவார்.
எழுபதுகளில் அவருக்குக் கிரிக்கெட்தான் எல்லாம். பெற்றோருக்கு இவரை எப்படிப் படிப்பில் கவனம் செலுத்த வைப்பது என்பதுதான் சவாலாக இருந்தது. “எனக்கு கிரிக்கெட் மிகவும் பிடித்தாக இருந்தது, ஆனால் சிறந்த வீரராகும் அளவிற்கில்லை.” என்பார். அதன் பின்னர் இளங்கலை பொறியியல் படிப்பு, அமெரிக்காவில் கணினி படிப்பு, எம்பிஏ என வாழ்க்கை மாறிவிட்டது. சச்சின் கையெழுத்திட்ட பேட், இன்றும் அவருடைய பொக்கிஷமான இருப்புகளில் ஒன்று.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!