Home » ஆபீஸ் – 98
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 98

98 ஹீரோ

ஓரிரு இலக்கியச் சிந்தனைக் கூட்டங்களில் தட்டுப்பட்ட, தன் புத்தக வெளியீட்டு விழாவில் பார்த்த முகத்தை பஸ்ஸில் பார்த்தது கொஞ்சம் பரபரப்பாக்கிவிட்டது. பெண்களை முன்பின் பார்க்காதவனோ பழகாதவனோ இல்லை என்றாலும் இந்தப் பெண் சற்றே வெட்கத்துடன் சிரித்ததைப்போலத் தோன்றியது வேறு  ஆர்வத்தைக் கூட்டிவிட்டது. மாநிறம் என்றுகூடச் சொல்லமுடியாது. பல்லுக்கு கிளிப் போட்டிருப்பதைப்போல வேறு இருந்தது. கல்லூரியிலேயே வசந்த் கூட அவ்வப்போது கிளிப்போடு திரிந்துகொண்டிருப்பான். மலையாளி ஆண்ட்டியை முதல் முதலாக முழுதாகக் கிட்டத்தில் பார்த்ததும் பஸ்ஸில்தான் என்பதும் சேர்ந்துகொள்ள மூக்குத்தியைப் பார்ப்பதும் பார்க்காததைப் போலப் பார்ப்பதுமாக இருக்கும்போதே சட்டென கே கே நகர் டிப்போ வந்துவிட்டது. பஸ் படிக்கட்டில் இறங்கும்போது ஹீல்ஸ் இல்லாத செருப்பு கண்ணில் பட்டது.

இறங்கியதும் நின்று, ‘ஹலோ நான் நிறைமதி. நிமா. நீங்க…’ என இவன் பெயரைச்சொல்லி, அவர்தானே என்றது. உயரம்தான் என்றாலும் பயந்த அளவுக்குத் தன்னைவிட உயரமில்லை என்பதில் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது.

‘ஆமா’ என்றதும் ‘எங்க வீடும் இங்கதான். டெப்போவுக்குப் பின்னாடி பாரதிதாசன் நகர். டைம் ஆகிடுச்சி. அப்புறம் பாப்போம்’ என்று சொல்லி சமயவேலுடைய தந்தி ஆபீஸ் போல கட் கட கட்கட்கட என்று  விடைபெற்றுக்கொண்டு போயேவிட்டது.

அவன் இருக்கும் ஏரியாவிலேயே அவன் வயதுப் பெண் அறிமுகமானது, அதிலும் படிக்கிற, இலக்கியக் கூட்டங்களுக்கு வருகிற பெண் பரிச்சயமானது பெரிய விஷயமாகத் தோன்றியது. தமிழ் படிக்கிற பெண்கள் பார்க்கும்படியாக இருந்து அவன் பார்த்ததேயில்லை. கல்லூரி பேச்சு, கவிதைப் போட்டிகளுக்கு வந்துகொண்டிருந்த பெண்களில் பெரும்பாலோர் பிஏ எக்கனாமிக்ஸ் பிகாம் பிஎஸ்ஸி என்று  தமிழைத் தவிர வேறு எதாவது படிப்பவர்களாகவே இருந்தார்கள். பார்க்கப் பார்க்க எல்லா முகங்களும் பார்க்கும்படி ஆகிவிடுகின்றன; பழகப் பழக எல்லா பெண்களுமே பிடிக்கிறவர்களாக ஆகிவிடுகிறார்கள். பெண் பரிச்சயம் என்பதே, கிட்டாத அபூர்வ வஸ்துவாக இருக்கையில்,

‘ஊர்ல எந்தப் பிள்ளைய பாத்தாலும் என் சைக்கிள் ஹேண்டில் பார் தானாவே டய்ங்குனு திரும்பிடும் உன் வயசுல. ஆனா நீ இந்த வயசுலையே கதை எழுதிப் புத்தகமாவே போட்டுட்டியேப்பா’ என்று துரை சொன்னதைப்போல,

பெண்கள் பின்னால் அலைவதெல்லாம் வீண் என்று வீம்பொடு திரிந்துகொண்டு இருந்தவனுக்கு தானாக வந்து சிநேகத்துடன் அறிமுகப்படுத்திக்கொள்வதெல்லாம் அசாதாரண விஷயமாகவே பட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!