ஏப்ரல் 27 , 2024. உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணை. பதஞ்சலி நிறுவனங்களின் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அது.
‘தொடர்ந்து மக்களைத் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை வெளியிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டித்து, நிறுவனம் சார்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால் அவர்கள் பத்திரிகையில் சிறிய பெட்டியளவில் அறிவிப்பைத் தந்திருந்தார்கள்.
அதைக்கண்டு கடுப்பான நீதிபதிகள், ‘நீங்கள் உங்கள் விளம்பரங்களையும் இதேபோல பெரிதாகத்தான் தந்தீர்களா? அறிவிப்பின் பெரிதாக்கப்பட்ட காகிதம் எங்களுக்கு வேண்டாம். அனைத்து நாளிதழ்களிலும் முழுநீள மன்னிப்புச் செய்தி வரவேண்டும்’ என்றனர். அதன்படி, ஏப்ரல் 30 தேதி, 67 செய்தித்தாள்களில் வந்த அறிவிப்பை நீதி மன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்கள்
மக்களிடையே ஆதரவு, செல்வம் மற்றும் செல்வாக்கு மிக்கவர்கள், ஒன்று தொழில் துறையில் இருப்பார்கள் அல்லது அரசியல், இல்லையென்றால் ஆன்மிகம். ஒருவர் மூன்றிலும் இருந்தால்? இருக்கிறார். பாபா ராம்தேவ். பதஞ்சலி நிறுவனங்களின் சென்ற ஆண்டு வருமானம் மட்டும் முப்பதாயிரம் கோடிகளுக்கு மேல். இத்தனைக்கும் இவர் அந்தக் குழுமத்தின் விளம்பர முகம் மட்டுமே. பெரும்பாலான பங்குகளை அவரது சகா, ஆசாரியா பாலகிருஷ்ணன் வைத்துள்ளார். தலைமை நிர்வாக அதிகாரியும் அவர்தான்.
ED & IT வழக்குகளில் விரைவில் சிக்குவார் ராஜகுரு பாபா ஜீ