Home » உரு – 4
உரு தொடரும்

உரு – 4

கலகக்காரனின் இறைப்பணிகள்

டத்தோ ஹம்சா பள்ளி / இடைநிலை வகுப்பில் கணிதப் பாடவேளை. ஆசிரியர் வகுப்பறையின் உள்ளே நுழைந்தார். கணிதம் என்று பெரிய பட்டையான எழுத்துகளால் கரும்பலகை நிரம்பியிருந்தது. சில நொடிகள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார் கணித ஆசிரியர் சுப்பிரமணியம்.

“யார் இதை எழுதியது?” என்று மாணவர்களைப் பார்த்துக் கேட்டார். திட்டப் போகிறாரா பாராட்டப் போகிறாரா என்பதைக் குரலைக் கொண்டு யூகிக்க முடியவில்லை. கிளாஸ் மானிட்டர் முத்துதான் அதை எழுதியது.

தயக்கத்துடன் ஒரு கையை உயர்த்தி “நான்தான் சார்” என்றார் முத்து.

“வகுப்பு முடிந்ததும் நூலக அறையில் வந்து என்னைப் பார்” அதே உணர்ச்சியற்ற குரல். சொல்லி விட்டுப் பாடம் நடத்த ஆரம்பித்துவிட்டார். வகுப்பு முடிந்த பிறகு என்ன நடக்கும் என்ற கலக்கத்திலேயே உட்கார்ந்திருந்தார் முத்து. பாட இடைவேளையில் ஆசிரியரைப் போய்ப் பார்த்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • தமிழ் எழுத்துருவின் வரலாற்றை சுவாரஸ்யமாக உருவாக்கி வருகிறீர்கள். சிறப்பான நடையில் நிதானமாக பயணிக்கிறது தொடர். வாழ்த்துகள்!

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!