போகப் போகத் தெரியும்
இது ஏ.ஐ/ திருவிழாக் காலம். சென்ற வாரத்தில் வெளியான ஏ.ஐ. அறிவிப்புகள் மட்டுமே, ஒரு தனிப் புத்தகம் எழுதுமளவுக்கு உள்ளன. இந்த ஏ.ஐ. விழாக் குழுவின் முக்கிய அங்கத்தினர்கள் ஓப்பன் ஏ.ஐ.யும், கூகுளும். இரண்டு நிறுவனங்களும் சில வியக்கத்தக்க ஏ.ஐ. அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
கடந்தசில வாரங்களாக ஏ.ஐ. வட்டாரங்களில் ஓப்பன் ஏ.ஐ. என்ன செய்யப் போகிறது என்னும் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே வந்தது. ஒரு புதிய தேடுபொறியை அவர்கள் வெளியிடக்கூடும் என்று சிலர் ஆருடம் கூறினர். இல்லை.. இல்லை.. ஜி.பி.டி.யின் ஐந்தாவது வெர்ஷன் வரப்போகிறது என்றனர் சிலர்.
இதற்குத் தூபம் போடும் விதமாக ஓப்பன் ஏ.ஐ.யின் நிறுவனர் சாம் ஆல்ட்மேனின் சில பேட்டிகள் அமைந்திருந்தன. தற்சமயம் நாம் பயன்படுத்திவரும் சாட்ஜிபிடி ஒன்றுமே இல்லை என்னும் அளவுக்கு இனிவரும் ஜிபிடி வெர்ஷன்கள் இருக்கும் என்றார். உடனே நம்மாட்களும் சலங்கை கட்டி ஆடத் தொடங்கினர்.
Add Comment