வானொலி கேட்கும் போதோ அல்லது தொலைபேசியில் பேசும் போதோ மற்றவர்களின் குரலை நம்மால் கேட்க முடிகிறது. அது மட்டுமல்லாமல் சூழலின் ஒலி வடிவங்களையும் நம்மால் கேட்க முடிகிறது. சினிமா, தொலைக்காட்சி, இணையத்தில் அல்லது நாமே பதிவு செய்த காணொளிகளில் நம்மால் காட்சி வடிவங்களைப் பார்க்க முடிகிறது. அத்துடன் அக்காட்சிக்கேற்ற ஒலியினையும் கேட்க முடிகிறது.
Virtual Reality headsets அணிந்து நாம் நம்மை முற்று முழுதாக வேறோருலகத்தில் ஐக்கியமாக்கிக் கொள்ளலாம். இந்த மெய்நிகருலகில் நாம் இணைந்து கொள்வதற்கு நாம் அணிந்திருக்கும் கருவிகள் எமது கண்ணுக்கும் காதுக்கும் கொடுக்கும் காட்சியும் அதனுடன் சேர்ந்த ஒலியுமே காரணம். ஓரளவு இது புலன்கள் மூலம் நம்மை மெய்நிகருலகுக்குக் கொண்டு சென்றாலும், இந்த அனுபவம் இயற்கையான உலகினை நாம் நமது ஐம்புலன்கள் மூலம் உணர்வதைப் போன்ற முழுமையைக் கொடுப்பதில்லை. எமது உணர்வுகளைக் கொடுக்கும் ஐம்புலன்களின் இன்னுமோர் முக்கியமான உறுப்பு மூக்கு. இந்த மூக்கு எனும் உறுப்பில் இந்நாள் வரையில் தொழில்நுட்பங்கள் அதிக கவனம் செலுத்தவில்லை.
ஒரு காட்சியினைத் திரையில் பார்க்கும் போது அங்குள்ள ஒலிகளோடு அதன் வாசனையும் நாம் உணர்ந்தால் எப்படி இருக்கும்? இனி வரும் காலங்களில் அதுவும் பொதுப் பயன்பாட்டில் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
Add Comment