Home » பிரிந்த காஷ்மீர் இணையுமா?
இந்தியா

பிரிந்த காஷ்மீர் இணையுமா?

“அதிக ஜிஎஸ்டி வரி வசூலித்து ஸ்லீப்பிங் பார்ட்னராக என் வருமானத்தை எடுத்துக் கொள்கிறீர்கள்” என இந்திய அரசை நோக்கி ஒருவர் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில் அதிக வரிக்காக பாகிஸ்தான் அரசுக்கு எதிராகக் கலவரம் நடந்தது. இந்தியா தலையிட வேண்டும் என்று போராட்டத்தில் குரல்கள் எழுந்தது சிறப்புச் செய்தி.

இந்திய வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர் என்று நாம் குறிப்பிட்டிருக்கும் பகுதி முழுவதும் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பது நாம் அறிந்ததே. மேலிருக்கும் பகுதியான கில்கிட் பல்திஸ்தான், கீழே இருக்கும் ஆசாத் காஷ்மீர் இரண்டையும் நாம் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதி (PoK) என்கிறோம். சர்வதேசச் சமூகம் அதை பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள பகுதியாகக் (PAK) குறிப்பிடுகிறது. தற்போது கலவரம் வெடித்திருப்பது பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில். சுயாட்சி பெற்று பாகிஸ்தானுடன் இணைந்திருந்தாலும் கில்கிட் இந்தப் போராட்டத்தில் ஆசாத் காஷ்மீருக்கு ஆதரவளிக்கிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதியைக் காலனியாதிக்க மனப்பான்மையுடன் அணுகுவதே சிக்கலின் அடிப்படை. ஆசாத் காஷ்மீர் மக்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். பாகிஸ்தானின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் பொருளாதாரம் இன்னும் அதிகம் சீர்குலைந்து வாழ்வாதாரம் இன்றி மக்கள் தவிக்கின்றனர். தனியாகப் பிரதமர் இருந்தாலும் ராணுவ அதிகாரிக்குக் கீழே பொம்மை நிர்வாகம்தான். அதிகாரமற்ற நிலை. ஊழல் நிர்வாகத்தின் மீது மக்களுக்குக் கோபம் உள்ளது. வளங்களை எடுத்துக்கொண்டு உரிமையை மறுத்தால் யார்தான் சும்மா இருப்பார்கள்? இதை எதிர்த்துப் பல ஆண்டுகளாகப் போராட்டங்கள் நடந்தாலும் பிராந்தியத்தில் இருக்கும் ராணுவக் கட்டுப்பாடுகள் காரணமாக அதிகம் வெளியே தெரிவதில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!