Home » அலிஸ் மன்றோ: பிடித்ததைச் செய்தால் பிரச்னை இல்லை!
ஆளுமை

அலிஸ் மன்றோ: பிடித்ததைச் செய்தால் பிரச்னை இல்லை!

அலிஸ் மன்றோ

அந்தக் கடற்கன்னி ஓர் இளவரசனைக் காதலித்தாள். ஆனால் கடற்கன்னியாக இருப்பதால் அவளால் அவனைத் திருமணம் செய்ய முடியவில்லை. அதற்காக அவள் சோர்ந்து விடவில்லை. தன்னுடைய மாய சக்திகளால் இடுப்புக்குக் கீழே தன் செதில்களைக் கால்களாக மாற்றி அமைத்துக் கொண்டாள். இதற்கு மேல் நீரில் தனக்கு வாழ்வு இல்லை என்று தெரிந்தும் மிகவும் மோசமான வலியையும் தாங்கித் தன் விதியை அவள் மாற்றி அமைத்தாள்.

குட்டிக் கடற்கன்னி என்கின்ற பிரபலமான சிறுவர் கதையின் வேறொரு வடிவம் இது. மூலக்கதை மேலே இருக்கின்ற முதல் இரண்டு வரிகளில் முடிந்து விடுகிறது. உலகில் யாருமே அறியாத இந்த மாறுபட்ட வடிவத்தை தனக்காக மட்டுமே எழுதிக் கொண்ட குழந்தை அலிஸ் ஆன் லெயிட்லோ.

கடந்த பதின்மூன்றாம் தேதி தன்னுடைய தொண்ணூற்று இரண்டாவது வயதில் இயற்கை எய்திய கனடிய எழுத்தாளர் அலிஸ் மன்றோவின் முதல் எழுத்துப் பரிசோதனை முயற்சி தான் மேலே நாம் பார்த்தது. திருத்தங்களின் மீது தீராக்காதல் கொண்டிருந்த அலிஸ் மன்றோ ஈராயிரத்துப் பதின்மூன்றாம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றார். இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்ற முதலாவது கனடியரும் சிறுகதைக்காக நோபல் பரிசு பெற்ற ஒரே எழுத்தாளரும் இவராவார். Dance of the Happy Shades, Lives of Girls and Women போன்ற பிரபலமான புத்தகங்களை எழுதிய அலிஸ் மன்றோ, கனடாவின் புனைகதைக்கான கவர்னர் ஜெனரல் விருதையும், புக்கர் பரிசையும் வென்றவர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!