தேடிக் கிடைப்பதில்லை எனத் தெரிந்த ஒரு பொருளை…
“கட்டிங் எட்ஜ்” என்றொரு ஆங்கிலச் சொல். அதிநவீனத் தொழில்நுட்பங்களைச் சுட்டப் பயன்படும் ஒரு சொல். அனுதினமும் மும்முரமாய் வளர்ந்து கொண்டிருக்கும் தொழில்நுட்பத்தின் அன்றலர்ந்த மலர் தான் ‘கட்டிங் எட்ஜ்’.
ஏ.ஐ. தொழில்நுட்பம் தற்போது வளர்ந்து வரும் வேகத்தில் தினம் தினம் ‘கட்டிங் எட்ஜ்’ மாறிக்கொண்டே இருக்கிறது. இவ்வாறான அதியுயர் தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும் போது, சில சறுக்கல்கள் ஏற்படுவதும் இயல்பானதே.
சென்ற வாரம் கூகுள் நிறுவனம் இவ்வாறான ஒரு சிக்கலைச் சந்தித்தது. அவர்களது ஐ.ஓ. நிகழ்வில், கூகுள் மிகவும் பெருமிதமாக அறிமுகப்படுத்திய ஒரு கருவி, “ஏ.ஐ. ஓவர்வ்யூ” (AI Overview).
அப்படியென்றால்..?
நீங்கள் கூகுளில் ஏதோவொன்றைத் தேடுகிறீர்கள். முன்பெல்லாம் நீங்கள் தேடிய தகவல்கள் இருக்கும் வலைப் பக்கங்களின் பட்டியலை மட்டுமே கூகுள் காட்டும். ஆனால் தற்போது, நீங்கள் கேட்கும் கேள்விக்கான சுருக்கமான விடையைக் கூகுளே தேடிக் கொடுத்துவிடுகிறது.
Add Comment