Home » பணம் படைக்கும் கலை – 8
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 8

8. மருத்துவக் காப்பீடு

ஆயுள் காப்பீடு உயிருக்குக் காவல் என்றால், நலக் காப்பீடு உடலுக்கும் மனத்துக்கும் காவல்.

உலகெங்கும் மருத்துவச் செலவுகள் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக, மருத்துவமனையில் சேர்த்துச் செய்யவேண்டிய அறுவைச் சிகிச்சைகள், அதற்கு முந்தைய, பிந்தைய பரிசோதனைகள், மருந்துகள் போன்றவற்றின் விலை மிக அதிகம். இதனால், பெரும்பாலான குடும்பங்கள் ‘one hospital bill away from poverty’ என்கிறார்கள். அதாவது, ஒரே ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றுத் திரும்பினால் இவர்களுடைய பொருளாதார நிலை தலைகீழாகப் புரட்டிப்போடப்பட்டுவிடுகிறது. ஓரளவு சேமிப்புடன் நன்கு குடும்பம் நடத்திக்கொண்டிருந்தவர்கள் திடீரென்று ‘வரவு எட்டணா, செலவும் எட்டணா’ என்று திகைத்து நிற்கிறார்கள். சிலர் அதைவிட மோசமாகக் கடன் வலைக்குள் சிக்கிக்கொள்கிறார்கள்.

ஆக, சம்பாதிக்கிறவருடைய உயிர் போனால் அவருடைய குடும்பம் என்ன செய்யும் என்று சிந்திக்கிற மாற்று ஏற்பாட்டைப்போல், சம்பாதிக்கிறவருக்கோ, அவரைச் சார்ந்திருக்கிற மனைவி, கணவர், பிள்ளைகள், பெற்றோர், மாமனார், மாமியார் போன்றோருக்கோ உடல்நலம், மனநலம் சரியில்லாமல் போனால், அதற்கு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறவேண்டியிருந்தால் அந்தச் செலவை எப்படிச் சமாளிப்பது என்பதற்கான ஓர் ஏற்பாடு தேவைப்படுகிறது. இதைத்தான் நலக் காப்பீடு (Health Insurance) செய்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!