543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்து முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.
தேர்தலுக்கு முந்தைய / பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பாஜக கூட்டணிக்குச் சாதகமாகவே இருந்தன. குறைந்தபட்சம் 281 முதல் அதிகபட்சமாக 401 இடங்கள் வரை பாஜக வெல்லும் என்பதே அனைத்து நிறுவனங்களும் சொன்ன ஆரூடம். இண்டியா கூட்டணி 108 முதல் 201 தொகுதிகள் வரை அதிகபட்சமாகப் பெறலாம் என்பதும் அந்தக் கருத்துக் கணிப்புகளில் இருந்த இணைப்புச் செய்தி.
2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 44 தொகுதிகளிலும், 2019ஆம் ஆண்டில் 52 தொகுதிகளிலும் மட்டுமே வென்று ஆட்சியமைக்கும் அதிகாரத்தை முற்றிலுமாக இழந்திருந்தது காங்கிரஸ். குஜராத் மாடல், மோடி அலை என கட்டமைக்கப்பட்ட பிம்பமும் காங்கிரஸ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும் பாஜகவை ஆட்சியில் அமர வைத்தன.
2019ஆம் ஆண்டு தேர்தலையொட்டி பாஜக கட்டமைத்த நாடகங்கள் பலனைத் தந்தன. மோடி மீண்டும் இரண்டாம் முறை பிரதமரானார்.
Add Comment