2024 நாடாளுமன்றத் தேர்தல்கள் பல ஆச்சரியங்களை அள்ளித் தந்திருக்கின்றன. அவை தரும் ‘அனுபவ’த்தில் தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளையும் பெற்ற வாக்கு விவரங்களையும் தவறவிட்டுவிடக் கூடாது அல்லவா?
பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு மற்றும் (அவருடைய பாட்டி இந்திரா காந்தியின் விருப்பத் தொகுதியான) ரேபரேலியிலும் போட்டியியிட்டார்.
மோடி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட உத்திர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராயை ஆறு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தினேஷ் பிரதாப் சிங்கையும் வயநாட்டில் பாஜகவின் கே. சுரேந்திரன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆனி குட்டி என்பவரையும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார்.
பாஜகவின் முக்கிய உறுப்பினர்கள் அமித்ஷா அவருடைய சொந்த மாநிலம் காந்தி நகரிலும் ராஜ்நாத் சிங் லக்னோவிலும் மனோஜ் திவாரி வட கிழக்கு டெல்லியிலும் கங்கனா ரணாவத் இமாச்சலப் பிரதேசம் மாண்டியிலும் சுல்தான்பூரில் மேனகா காந்தியும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் விதிஷா மாவட்டத்தில் ஆறு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாஜகவின் நட்சத்திர வெற்றியாளர் ஆகியிருக்கிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பழம்பெரும் காங்கிரஸ் தலைவர் பிரதாப் பானு ஷர்மாவை எதிர்த்து இத்தனை வாக்குகள் பெற்றது சாதாரண விஷயமல்ல.
Add Comment