காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
ஜெனரேட்டிவ் ஏ.ஐ. அறிமுகமான போது, பலரும் “இது தேறாது…” என்றே தீர்ப்பெழுதினர். ஆனால் மிகச்சில மாதங்களுக்குள்ளாகவே நிலைமை பெருமளவு மாறியுள்ளது. இன்றைக்கெல்லாம் ஏ.ஐ. மூலம் படம் வரைவது இயல்பாகியிருக்கிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பத்திரிகைகள் வரை அனைவருமே ஏ.ஐ. ஓவியங்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இதற்கான முதன்மைக் காரணம் எளிமை. துரிதமாக நாம் நினைத்ததைத் தெளிவாக வரைந்துவிட முடிவது. “இது வேணாம்… வேற காட்டு” என்று நொடிகளில் மாற்றமுடிவது.
என்னதான் நீட்டி முழக்கி வார்த்தைகளால் விவரித்தாலும், ஓர் ஓவியம் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கொண்டுவருவது கடினம். ஒரேயொரு படமே ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்றால், ஒரு வீடியோ?
படம் வரையும் ஏ.ஐயின் அடுத்தகட்ட நகர்வு வீடியோ. நாம் தரும் ப்ராம்ப்ட்டிற்கு வீடியோ உருவாக்கித் தருவதே இவ்வகை ஏ.ஐயின் நோக்கம்.
இந்த வாரம் (ஜூன் முதல் வாரம், 2024), வீடியோ உருவாக்கித் தரும் ஏ.ஐ. ஒன்று வந்திருக்கிறது. ‘க்ளிங்’ (KLING) என்று பெயரிடப்பட்டுள்ளது. சீன நிறுவனமான Kuaishou இதை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம், சீனாவில் மிகவும் பிரபலம். ரீல் வீடியோக்கள் பகிரும் இவர்களது ப்ளாட்ஃபார்ம் சீனாவில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது.
பாலய்யகாரு,பீஜிங் டிக்கெட்!செம!
விஸ்வநாதன்