Home » பேசாதே, முடிந்தால் செய்!
உலகம்

பேசாதே, முடிந்தால் செய்!

தேர்தல் முடிவுகள் சிலசமயம் திடுக்கிட வைப்பது சரிதான். ஆனால் தேர்தல் அறிவிப்பின் மூலமே திடுக்கிட வைத்தவர் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனாக மட்டும்தான் இருப்பார். தேர்தல் ஆண்டு என்று பெயர் சூட்டுமளவு, இந்த ஆண்டுமுழுவதும் உலகின் ஏதாவதொரு நாட்டில் தேர்தல் நடந்துவருகிறது. தாமாக முன்வந்து இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது பிரான்ஸ்.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, இரண்டுகட்டத் தேர்தல் முறையைக் கொண்டது பிரான்ஸ். 2022-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், முதல் கட்டத்தில் பெரும்பான்மை (50%) கிடைக்காமல், இரண்டாம் கட்டத்தில் தேர்வானவர்தான் தற்போதைய அதிபர் மக்ரோன். இன்னும் மூன்றாண்டு பதவிக்காலம் பாக்கி இருக்கிறது. ஏற்கனவே இருமுறை அதிபராகிவிட்டதால், இனி அந்த வாய்ப்பும் இல்லை. இருந்தும் தற்போதையப் பிரதமர் கபிரியேல் அட்டலின் ஆட்சியைக் கலைத்துவிட்டு, உடனடித் தேர்தலை அறிவித்திருக்கிறார் என்பதுதான் திடுக்கிட வைக்கிறது.

“ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. ஒன்றுமே நடக்காததுபோல் என்னால் கடந்து சென்றுவிட முடியாது” என்றுதான் இந்த முடிவை அறிவிக்கத் தொடங்குகிறார் மக்ரோன். பிரான்ஸின் தற்போதைய எதிர்க்கட்சியான, மரீன் லு பென்னின் தேசியப் பேரணிக் கட்சி, ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலில் 31.5% வாக்குகளைப் பெற்றுவிட்டது. ஆளுங்கட்சியான இவரது மறுமலர்ச்சிக் கட்சிக்கு, 15.2% வாக்குகள் மட்டுமே கிடைத்தன. ஜெர்மனியிலும், பெல்ஜியத்திலும் இதே நிலைமைதான். வலதுசாரிக் கட்சிகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் 40% வாக்குகளை இம்முறை பெற்றுள்ளன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!