வீட்டில் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும், நெருங்கிய உறவுத் திருமணம் போன்ற விழாக்களில் கலந்து கொள்ள வரும் கணவன் மனைவியர் எப்படிக் கவலை மறந்து சிரித்துக் கலகலப்பாய் திருமணத்தை நடத்தி வைப்பதில் மும்முரமாக ஈடுபடுவார்களோ அதுபோலவேதான் கிட்டத்தட்ட இந்த முறை இந்த G7 உச்சி மாநாடும் (summit) கூடியிருக்கிறது.
திருமணங்களில் எடுக்கப்படும் புகைப்படங்களின் பின்னால் பேசாத பல கதைகள் இருக்கும். அவற்றை மீண்டும் பார்க்கும் போது மலரும் நினைவுகள் வருகிறதோ இல்லையோ, புகையும் நினைவுகள் வருவதென்னவோ நிச்சயம்.
தொழில் வளர்ச்சியடைந்த ஏழு மக்களாட்சி நாடுகளின் (industrialized democracy) தலைவர்கள் சர்வதேச அளவில் மக்கள் உரிமை, பொருளாதாரம், சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் போன்ற முக்கியக் கொள்கைகளை விவாதித்துச் சில தீர்மானங்களை எடுக்க ஆண்டுதோறும் கூடுவது G7 Summit. இதில் அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மன், ஜப்பான், கனடா, யுனைட்டெட் கிங்டம்,, பிரான்ஸ் போன்ற நாடுகளின் தலைவர்கள் அங்கத்தினர்கள்.
Add Comment