Home » விளையாட்டு அரசியல்: இது ரனில் ஸ்டைல்!
உலகம்

விளையாட்டு அரசியல்: இது ரனில் ஸ்டைல்!

தேர்தல் நடக்குமா நடக்காதா என்று ஒரு தேசத்தின் மக்கள் குழம்பிப் போவதைப் போன்ற அபாக்கியம் வேறெது இருக்க முடியும்? இலங்கையில் ஜனாதிபதி ரணிலின் அண்மைய நகர்வுகள் எதுவுமே நம்பும்படியாய் இல்லை. இது தொடர்பான விரிவான கட்டுரையை முன்பு வெளியிட்டிருந்தோம்.

தனது அடிப்பொடிகளைப் பயன்படுத்தி மேலும் இரண்டு வருடங்களுக்கு ஜனாதிபதித் தேர்தலையும், பாராளுமன்றத் தேர்தலையும் ஒத்திப்போட ரணில் மறைமுக முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக விமர்சனங்கள் வரும் போதெல்லாம் ‘இல்லை. தேர்தல் கண்டிப்பாய் நடக்கும்’ என்று ரணிலின் அசரீரி எங்கிருந்தோ வரும். மீண்டும் ஒரு வாரத்தில் அது ஆறிப்போக திரும்பவும் யாரோ ஒருவர் ஃபர்னிச்சரைப் போட்டு உடைக்க.. பெரும் களேபரமாகிவிடும்.

இப்போது ஏற்பட்டிருக்கும் புதுச் சிக்கல் என்னவென்றால் இந்த மாதம் ஓய்வுபெறவிருக்கும் சட்டமா அதிபரின் பதவிக் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க ரணில் செய்து கொண்டிருக்கும் வேள்விகளும் , சூனியங்களும் சந்தி சிரித்துக் கொண்டிருப்பதுதான். இதுவரை நாட்டில் நாற்பத்தேழு சட்டமா அதிபர்கள் பதவி வகித்துவிட்டு ஓய்வு பெற்றிருக்கிறார்கள். ஆனால் எவரது பதவிக்காலமும் இப்படி ஜனாதிபதிகளின் பரிந்துரையின் பெயரில் நீட்டிக்கப்பட்டதில்லை. சரித்திரத்தில் இல்லாத வழக்கமாய் ரணில் சட்டமா அதிபரை மடியில் இருத்திக் கொள்ள முயல, அரசியல் சாசனப் பேரவை ரணிலின் விருப்பங்களுக்கு எமனாய் மாறி முற்றாய்ப் புறக்கணித்திருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்