Home » சாத்தானின் கடவுள் – 11
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 11

11. நால்வரும் ஒருவனும்

ஆனந்த வடிவம்.

ஆம். அதைத்தான் பார்த்துக்கொண்டிருந்தோம். பெரும்பாலும் அறிவு திறந்துவிட்ட காலத்தில் வசிக்கும் வசதி நமக்கு இருக்கிறது. எதையும் தவறாகவேனும் நாமே யோசித்துக்கொள்ள முடிகிறது. யோசிக்கும் விதம் தவறு என்று உணரக் கால தாமதம் ஆகிவிட்டாலும் பிறகு சரி செய்துகொள்ளவோ, அப்படியே விட்டுவிடவோ இன்று நம்மால் முடியும். சிந்திக்காதே என்று யாரும் சட்டையைப் பிடித்துச் சண்டைக்கு வருவதில்லை.

ஆனால் நாகரிகம் வளரத் தொடங்கியிருந்த மிகத் தொடக்க காலத்தில் உலகெங்கும் மக்கள் சிறு சிறு இனக்குழுக்களாகத்தான் வசித்து வந்தார்கள். வழி நடத்துபவர்கள், பின்பற்றி நடப்பவர்கள் என்ற இரு தரப்பு மட்டுமே அப்போது இருந்தது. இன்றைய வட கொரிய அரசாங்கம்-வட கொரிய மக்களைப் போல. சிந்திப்பது ஒரு சாராரின் பணி என்றால் பிறர் அதைச் செய்வதில்லை. அப்படிச் செய்தால் அது குற்றமாகப் பார்க்கப் படலாம். தண்டிக்கப் படலாம். வேறேதாவது விளைவும் இருக்கலாம். ஊகத்தில் கண்டெடுக்க முடியாத பல இருள் முட்டுச் சந்துகள் நிறைந்த பிராந்தியம் அது. இதில் தன்னியல்பாக அப்படி மறைந்து நிற்பவை போக, திட்டமிட்டு மறைக்கப்பட்டவையும் உண்டு.

உதாரணமாக வேதங்கள் ஏன் முற்காலத்தில் எழுதி வைக்கப்படாமல் வாய் மொழியாகவே ஒரு குறிப்பிட்ட தரப்பினரால் (அன்று அந்தணர்கள் வேறு, வேதம் ஓதும் அந்தணர்கள் முற்றிலும் வேறு.) தமது வாரிசுகள் வழியாகவே பாதுகாக்கப்பட்டன?

இதற்கு மிக எளிய, சாத்வீகமான விடை ஒன்று சொல்ல வேண்டுமானால், பஞ்சாப் பிராந்தியத்தில் அன்று வசித்த நாடோடிக் கவிஞர்களுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்கவில்லை என்று சொல்லலாம். அவர்கள் பயன்படுத்திய மொழிக்கு முழுமையான எழுத்து வடிவம் என்ற ஒன்று உருவாகியிருக்கவில்லை என்றும் சொல்ல முடியும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • உயிர்கள் அனைத்தையும் படைத்தவன் ஒருவனாக இருப்பானேயானால், தான் படைத்தவற்றுள் பாகுபாட்டை உண்டாக்கி வைக்க அவன் நிச்சயம் விரும்பமாட்டான். 👏👌

  • “மனிதகுலத்தை நான்காகப் பிரிப்பதுதான் நல்லது என நினைத்திருந்தால் நிச்சயமாக அவன் கடவுளாக இருந்திருக்க மாட்டான்”. – எல்லா அரசு, தனியார் அலுவலகங்களிலும் கல்விக்கூடங்களிலும் இந்த வரிகளை எழுதிவைக்க வேண்டும் சார்.

Click here to post a comment

இந்த இதழில்