Home » இலக்கொரு பக்கம், உயிரொரு பக்கம்!
இந்தியா

இலக்கொரு பக்கம், உயிரொரு பக்கம்!

உலகின் உயர்ந்த மலைச்சிகரம் எது என்று கேட்டால், “இதுகூடத் தெரியாதா? எவரெஸ்ட் சிகரம்தான்” என்று எளிதாகச் சொல்லி விடுவீர்கள். 29,031 அடி உயரமுள்ள இந்த எவரெஸ்ட் சிகரம் ஒருகாலத்தில் ஏறமுடியாத மலை என்று பிரமிப்புடன் பார்க்கப்பட்டது. இன்றோ.. விஞ்ஞான வளர்ச்சியினால் கண்டுபிடிக்கப்பட்ட சாதனங்கள் இங்கே ஏறுவதை எளிதாக்கித் தந்திருக்கின்றன. என்றாலும் உயிர் குடிக்கும் சிகரமாகச் சமீப காலங்களில் இம்மலைச்சிகரம் உருவெடுத்துள்ளது. அடிக்கடி மரணங்கள்.

எப்படி உயிர்குடிக்கும் சிகரமாக ஆனது? என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்வதற்கு எவரெஸ்ட் பற்றிய சில தகவல்களைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

இமயமலைத் தொடரில் உள்ள இச்சிகரம் நேபாள் மற்றும் திபெத்துக்கு (சீனா) நடுவில் உள்ளது. உலக மக்கள் எவரெஸ்ட் என்று அழைத்தாலும், இந்த சிகரம் நேபாளில் சாகர்மா என்றும் சீனவில் சோமோலுங்குமா என்றும் அழைக்கப்படும். எவரெஸ்டில் முதன்முதலில் 1953-இல் நியூசிலாந்தைச் சேர்ந்த எட்மண்ட் ஹில்லரி மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த டென்சிங் நோர்கே என்பவர்கள் கால் பதித்தார்கள். இவர்களுக்கு முன், 12 முறை எவரெஸ்ட் சிகரத்தை அடையும் முயற்சிகள் நடந்தன, ஆனால் யாரும் வெற்றியுடன், உயிருடன் திரும்பி வந்து சேரவில்லை.

காரணம்.. எவரெஸ்ட் ஏறும் முயற்சியானது நான்கு படிநிலைகள் கொண்டது. முதல் அடுக்கு என்று சொல்லப்படும் “பேஸ் கேம்ப் (base camp)”, 17,500 அடி உயரத்தில் உள்ளது. இங்கு வரும்பொழுதே, ஆக்ஸிஜன் பாதி குறைந்து விடும். இங்கேதான் ஒருவரின் உடல் அதன் உண்மை நிலையை காட்டும். குமட்டல், வாந்தி, வயிற்றுபோக்கு எல்லாம் இங்கே ஆரம்பிக்கும் வாய்ப்பு மிக அதிகம். இங்கே அவரவர் தங்கள் உடல் நிலையை கண்டு மேலும் செல்வதை தவிர்க்க வேண்டும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!