எங்கெங்கு காணினும் சக்தியடா
செயற்கை நுண்ணறிவு ஒன்றும் புதிதல்ல. அறுபதாண்டுகளுக்கும் மேலாக ஏ.ஐ துறை சார்ந்த ஆய்வுகள் நடந்த வண்ணமே உள்ளன. ஆனால் கடந்த இரண்டாண்டுகளில் எங்கெங்கும் ஏ.ஐ என்னும் ஒரு நிலை வந்துள்ளது. எவ்வாறு நிகழ்ந்ததிந்தப் பெருமாற்றம்?
இக்கேள்விக்கான பதிலைத் தேடுவதற்கு நாம் இரண்டு முக்கியமான காரணிகளைப் புரிந்துகொள்ள வேண்டும். முதலாவது “தரவு”. டேட்டா. செயற்கை நுண்ணறிவின் அத்தியாவசியத் தேவை நாம் உருவாக்கி வைத்திருக்கும் இத்தரவுகளே. மிகப்பெரிய அளவினதான தகவல்கள் இன்றைக்கு சர்வசாதாரணமாகக் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது, கம்ப்யூட்டிங் பவர். நமது கணினிகளின் செயல்திறன். ஆரம்ப காலத்தில் இத்திறன் மிகவும் குறைவு. படிப்படியாக வளர்ந்து இன்றைக்கு, ஒரு விநாடியில், ட்ரில்லியன் (ஒரு லட்சம் கோடி) கணக்கீடுகள் செய்யும் வேகத்தை எட்டிவிட்டோம். இதை நாம் கற்பனை செய்வதுகூடக் கடினம்தான்.
Add Comment