Home » பணம் படைக்கும் கலை – 12
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 12

12. இன்னும் சில பழக்கங்கள்

சம்பளம், கும்பளம் தொடர்பான மீதமுள்ள அனைத்துப் பழக்கங்களையும் இந்த அத்தியாயத்தில் பார்த்துவிடுவோம்.

9. அறிமுகப்படுத்திச் சம்பாதித்தல்

என்னுடைய பழைய அலுவலகத் தோழர் ஒருவருக்கு நட்பு வட்டம் பெரியது. கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் இளைஞர்களில் தொடங்கி, விரைவில் ஓய்வு பெறப்போகிற முதியவர்கள்வரை பலவிதமான மக்களுடன் அவர் நன்கு பழகிக்கொண்டிருந்தார். அந்தப் பழக்கத்தின்மூலம் அவருக்குக் கிடைத்த பல நன்மைகளில் ஒன்று, கூடுதல் பண வரவு!

நாங்கள் வேலை செய்த நிறுவனத்தில் அவ்வப்போது புதிய வேலைவாய்ப்புகள் திறக்கும். மென்பொருள் எழுதுபவர், அதைப் பரிசோதிப்பவர், இணையத் தளங்களை வடிவமைப்பவர், பொறியாளர்களை மேய்க்கிறவர், திட்ட மேலாளர், நிதி வல்லுனர் என்று அந்த வேலைவாய்ப்புகள் பலவிதமாக அமையும்.

ஆனால், என்னுடைய தோழரின் நட்பு வட்டம் கிட்டத்தட்ட ஒரு சிறு கிராமத்துக்குச் சமமானது என்பதால், வேலைவாய்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு ஏற்ற ஓரிரு நபர்களாவது அவருக்கு நண்பர்களாக இருப்பார்கள். சட்டென்று அவர்களிடம் பேசுவார், அவர்களை எங்கள் நிறுவனத்துக்கு அறிமுகப்படுத்துவார், நேர்முகத் தேர்வுக்கு ஏற்பாடு செய்வார், அந்த நேர்முகத் தேர்வை எப்படிச் சிறப்பாகச் சந்தித்து வெற்றிபெறுவது என்று அந்த நண்பர்களுக்கு அக்கறையாகச் சொல்லித்தந்து ஆயத்தப்படுத்துவார், அவர்களுடைய ஐயங்களைத் தீர்த்து ஊக்கம் கொடுப்பார்… இப்படி அவர் பரிந்துரைக்கிற ஆட்களில் ஆண்டுக்கு நான்கைந்து பேருக்காவது எங்கள் நிறுவனத்தில் வேலை கிடைத்துவிடும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!