Home » கண்டெண்ட் க்ரியேட்டர்களின் குலசாமி!
ஆளுமை

கண்டெண்ட் க்ரியேட்டர்களின் குலசாமி!

கடந்த வாரம் சென்னை கீழ்க்கட்டளை, போரூர், மேடவாக்கம் பகுதிகளில் மிஸ்டர் பீஸ்ட் என்ற பெயரில் மிகப்பெரிய விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. இரண்டரை லட்சங்களை அதற்கு உபயமாக அளித்தவர்கள், தமிழ் யுடியூபர்கள். காரணம் இல்லாமல் இல்லை. ஜேம்ஸ் ஸ்டீபன். ஜிம்மி டொனல்டுசன் என்னும் பெயர் கொண்ட மிஸ்டர் பீஸ்ட்தான் உலகின் அதிகம் சம்பாதிக்கும் யுடியூபர். கிட்டத்தட்ட இருநூற்றுத் தொண்ணூறு மில்லியன் பார்வையாளர்கள்.
அதற்கும் பில்போர்டுக்கும் என்ன சம்பந்தம்?

மிஸ்டர் பீஸ்டின் அபிமானி PewDiePie-க்கும் (சக யுடியூபர் ) T series-க்கும் இடையேயான அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட சேனலுக்கான போட்டியில், pewdipie-க்கு ஆதரவளிப்பதற்காக மிஸ்டர் பீஸ்ட் அமெரிக்காவில் செய்த வேலையை நம்மவர்கள் இங்கே செய்துள்ளனர். சுவாரசியம் என்னவென்றால், அவர்களின் அந்தக் காணொளியைப் பார்த்து விட்டு, ‘பலகைகளை வைத்ததற்கு நன்றி’, என மிஸ்டர் பீஸ்ட் பதிவிட்டது தான். தமிழ் யுடியூபர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருக்கும் ஆர்வமிகு கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு குலசாமியாக விளங்கும் இந்த மிஸ்டர் பீஸ்ட் யார்..?‘

பள்ளிக் காலத்தில், கூச்சச் சுபாவம் கொண்ட, யாரோடும் பேசாத, சராசரி மாணவன்தான். தன்முன் யாரேனும் வந்து நின்றால் கூட பயந்து ஓடும் அளவிற்கு இருந்த ஜிம்மி, உலகப் புகழ் பெற்ற மிஸ்டர் பீஸ்ட் ஆனது ஒரு சுவாரசியக் கதை. இத்தனைக்கும் மிஸ்டர் பீஸ்ட் 6000 என்பது, அவர் விளையாடிய வீடியோ கேமில் அவருக்குக் கொடுக்கப்பட்ட தற்காலிகப் பெயர்.
அமெரிக்காவின் வடக்குக் கரோலினா பகுதியைச் சேர்ந்தவர் பீஸ்ட். தாய் ராணுவத்தில் பங்காற்றியவர். இளம் வயதிலிருந்தே, தனக்கு ஏதாவது மிகவும் பிடித்துப்போய் விட்டால், அதற்காகத் தன்னையே அர்ப்பணித்து விடும் தன்மை பீஸ்டிடம் இருந்தது. அந்த வகையில் முதலில் அவரை கவர்ந்தது பேஸ்பால் விளையாட்டு. எந்நேரமும் மைதானத்திலேயே இருந்தவருக்கு, லீக் போட்டிகளுக்காக, பலரைச் சந்திக்க வேண்டியதும், பேச வேண்டியதும் இருந்தது சிரமத்தைத் தந்தது. அதோடு உடல் நிலையில் சில கோளாறுகளும் ஏற்படவே, அவரால் தொடர்ந்து வெளியிட முடியாமல் போனது. அப்போது தான் அவர் யுடியூப் காணொளிகளைப் பார்க்கத் தொடங்கியிருந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!