Home » மன்னித்தேன் போ!: அசான்ஞ் விடுதலையும் அப்பாலும்
உலகம்

மன்னித்தேன் போ!: அசான்ஞ் விடுதலையும் அப்பாலும்

அசாஞ்சே

“தனது அடையாளத்துடன் இருக்கும்போது மனிதனின் சுயரூபம் வெளிவராது. அவனுக்கு ஒரு முகமூடியைக் கொடுங்கள், உங்களுக்கு உண்மைகளைச் சொல்வான்” என்றார் புகழ்பெற்ற கதாசிரியர் ஆஸ்கார் வைல்ட்.

இணையத்தின் வழியே அந்த முகமூடியை வழங்கி, உண்மைகளை வெளிக்கொண்டு வந்தவர் ஜூலியன் அசான்ஞ். முகமூடிக்குள் வெகுநாள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. கழற்றிய பின்பும் போராடியவர். இப்போது சிறைவாசம் முடித்து, வீடு திரும்பியிருக்கிறார். விமானம் ஏறியவுடன் அடிவானத்தை அதிசயமாகப் பார்க்கிறார். பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு பார்த்தது. பழைய வாழ்க்கை மீண்டும் உதயமாகக் காத்திருக்கிறது.

விமானம் தரையிறங்கியவுடன், “நம் தாய்நாட்டிற்கு உங்களை வரவேற்கிறோம்” என்று அலைபேசியில் வரவேற்கிறார் ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பனீஸ். “நீங்கள் என் உயிரைக் காப்பாற்றி விட்டீர்கள்” என்று உணர்ச்சிப்பூர்வமாக நன்றி கூறுகிறார் ஜூலியன் அசான்ஞ். காத்திருந்த மனைவி ஸ்டெல்லாவைக் கட்டியணைத்துக் கொள்கிறார். சூழ்ந்திருந்த நிருபர்களிடம், “அவர் அனுபவித்தது உங்களுக்கும் புரிந்திருக்கும். அதிலிருந்து மீண்டு சுதந்திரமாக வாழ ,அவர் இனிமேல்தான் பழக வேண்டும்.” என்கிறார் மனைவி ஸ்டெல்லா.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்