மே 15, அதிகாலை. போர்கும் (Borkum) சரக்குக் கப்பலை ஸ்பானியக் கடற்கரையில் சிலர் நிறுத்தினார்கள். வேறு வழியில்லாமல் கார்டேஜினா நகரக் கடற்கரையிலிருந்து சிறிது தொலைவில் நின்றது அந்தக் கப்பல். பாலஸ்தீனியக் கொடிகளை அசைத்து கப்பலை நிறுத்திய எதிர்ப்பாளர்கள் இந்தக் கப்பல் இஸ்ரேலுக்கு ஆயுதங்களைக் கொண்டு செல்கிறது என்ற சந்தேகத்தில் அதிகாரிகளை ஆய்வு செய்ய அழைத்தனர்.
அன்று காலையே ஸ்பெயின் ஜனாதிபதி பெட்ரோ சன்செஸுக்கு கப்பலை எக்காரணம் கொண்டும் நிறுத்தக் கூடாது என்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் இடதுசாரி உறுப்பினர்கள் அவசரமாக ஒரு தகவல் அனுப்பியுள்ளனர். ஸ்பானிய அரசாங்கம் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு முன், போர்கும் அதன் திட்டமிட்ட நிறுத்தத்தை ரத்து செய்து ஸ்லோவேனியத் துறைமுகமான கோபருக்குச் சென்றது.
’இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றப்பட்ட கப்பலை அனுமதிப்பது, பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்காகத் தற்போது விசாரணையில் உள்ள ஒரு நாட்டிற்கு ஆயுதங்களைக் கொண்டு செல்வதை அனுமதிப்பதாகும்.’ என்று ஒன்பது மெய்களின் (MEP) குழு எச்சரித்தது.
Add Comment