2023-24-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி (Defence Production) புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பாதுகாப்பு உற்பத்தி என்பது போர்க் கருவிகள் மற்றும் அதற்குத் தேவையான பாகங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வது. மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியான பாதுகாப்பு புதிய மைல்கற்களைத் தாண்டியுள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்புக்கும் வெளிநாடுகளுக்கு அக்கருவிகளை ஏற்றுமதி செய்வதன் மூலமும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பாதுகாப்பு உற்பத்தி முக்கியப் பங்கு பெறுகிறது. பாதுகாப்பு உற்பத்தியில் அத்துறை அமைச்சகம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த வளர்ச்சியை எட்டியுள்ளது. “ஆத்மநிர்பர்தா பாரத்’தை (தன்னம்பிக்கை பாரதத்தை) அடைவதில் கவனம் செலுத்துகிறது.” என்று பாதுகாப்பு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“அனைத்துப் பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனங்கள் (டிபிஎஸ்யு), பாதுகாப்புப் பொருட்களை உற்பத்தி செய்யும் பிற பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, நாட்டின் பாதுகாப்பு உற்பத்தியின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது, அதாவது ரூ.1,26,887 கோடி. முந்தைய நிதியாண்டின் பாதுகாப்பு உற்பத்தியைவிட 16.7 சதவீத வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Add Comment