ப்ராம்ப்ட் அமைவதெல்லாம்…. இறைவன் கொடுத்த வரம்
படம் வரைகிறது. வீடியோ உருவாக்குகிறது. இசைக்கிறது. வினாக்களுக்கு விடையளிக்கிறது. ஏ.ஐ.யின் இத்திறன்களனைத்தும் அனுதினமும் விரைவாக மேம்பட்டுக்கொண்டே வருகின்றன. ஆனபோதும், இவற்றையெல்லாம் மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்னும் வரிசையில் வைக்க இயலாது.
இந்த வாரம் (ஜூலை இரண்டாவது வாரம் 2024), ஏ.ஐ. துறையில் மிக முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அது ‘நல வாழ்வு’ குறித்தது. ஓப்பன் ஏ.ஐ. நிறுவனமும் ‘த்ரைவ் ஹெல்த்’ என்னும் நிறுவனமும் இணைந்து ‘த்ரைவ் ஏ.ஐ. ஹெல்த்’ (Thrive AI health) என்றொரு புதிய வசதியைக் கொண்டுவரவுள்ளது. இது ஏன் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகிறது? என்னென்ன வசதிகள் வரவிருக்கின்றன?
நலம் உயிர்களின் அடிப்படைத் தேவை. மனிதகுலத்திற்கு நலம் என்பது இரண்டு பரிமாணங்களால் ஆனது. முதலாவது உடல் நலம். இரண்டாவது மனநலம். இவ்விரண்டு நலன்களும் ஐந்து விஷயங்களை அடிப்படையாகக் கொண்டது.
Add Comment