மறதி நோய் வருவதற்கு வயதாகித்தான் இருக்க வேண்டும் என்பதல்ல. பலருக்கு நடுவயதிலேயே 40, 50 வயதுகளிலேயே கூட வருவதுண்டு. வயதானவர் என்று சொல்வது தகாது, அனுபவம் மிக்கவர் என்றே அழைக்க வேண்டும் என்று பாடம் எடுக்கக் கூடிய அமெரிக்காவில்தான் விவாதத்திற்கு முன்னரே, நிக்கி ஹேலியால், “அதிபர் பைடன் எத்தனை காலம் உயிர் வாழ்வார் மக்களே உங்கள் அதிபர் கமலாதான்” என்று கேலியாகப் பேச முடிந்தது.
பத்தாம் மாதம் பிறப்போம் என்பதை எழுதி வைத்த பரம்பொருள் இவர்கள் எத்தனை காலம் இருப்பார்கள் என்பதை இரகசியமாக வைக்காமல் நிக்கி ஹேலிக்கும் டிரம்பிற்கும் மட்டும் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான் போல. அவர்கள் பதவியேற்றால் அடுத்த நான்காண்டுகள் நிச்சயமாக உயிர்வாழ்தல் என்பது கல்லில் எழுதிய சித்திரமா என்ன?
பதவியிலிருந்தபடி அதிகாரத்தையும் மரியாதையையும் சந்தித்து வந்தவர்களால் திடீரெனக் கல்லூரி மாணவர்கள் போலத் தமக்கு எதிராக வைக்கப்படும் முக்கியக் கேள்விகளைச் சந்திக்க முடிவதில்லை. அதிலும் அவர்கள் செய்த சாதனைகள், செய்யப்போகும் திட்டங்கள் குறித்தான கேள்விகள்தான். என்னதான் அதிபர் பதவி என்பது தற்காலிகமானது, விவாதங்கள் நடைபெறும் என்பதெல்லாம் எதிர்பார்த்ததுதான் என்றாலும் உண்மையைச் சந்திக்கும் வரையில் அதை உணர்வுப்பூர்வமாக உணர்வதில்லை. அதிலும், அவர்கள் அன்றைய தினம் வரை பல முக்கிய பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டியதாகியிருக்கிறது.
Add Comment