Home » G இன்றி அமையாது உலகு – 14
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 14

14. வீடியோ ராஜாவும் பிரவுசிங் ராணியும்

மின்னஞ்சல் புரட்சி வந்துவிட்டது. நினைத்த நேரத்தில் உலகின் எந்த மூலையிலிருந்தும் இன்னொரு மூலைக்குத் தொடர்பு கொள்ள முடிகிறது. உடனடியாகத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது.

பையனை அமெரிக்க வேலைக்கு அனுப்பிவிட்டு, பண்டிகை, திருநாள் காலங்களில் பையன் பொங்கல் சாப்பிட்டானோ இல்லையோ என்று தவித்துக்கொண்டிருக்கும் பெற்றோர்களின் கவலையெல்லாம் பழங்கனவானது. பிட்ஸ்பர்க் கோவிலில் பெருமாள் தரிசனம் செய்துவிட்டு, டிஜிடல் கேமராவில் பிரசாதம் சாப்பிடும் புகைப்படங்கள் எடுத்து, ஜிமெயில் வழியாக அனுப்பி வைக்கப்பட்டன. பெற்றோர் உளம் குளிர்ந்தது. உலகமெங்கும் வியாபார மெத்தனங்கள் அதனால் மேம்பட்டன. ஒப்பந்தங்களில் ஏற்படும் சிக்கல்கள் உடனுக்குடனாக தீர்த்து வைக்கப்பட்டன. பயணங்கள் மின்னஞ்சலிலேயே திட்டமிடப்பட்டு பயணச்சீட்டுகளின் முன்பதிவுகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்பட்டன. இப்படி பல்வேறு தளங்களில் மின்னஞ்சல் சேவை நிறைய மாற்றத்தைக் கொண்டுவந்திருந்தது.

ஆனாலும் பெரிதினும் பெரிதுகேள் என்பதையே தங்களது பிறவி லட்சியமாகக் கொண்ட மனிதர்களுக்கு அது போதவில்லையே! புகைப்படங்கள் சரி, வீடீயோக்களை எப்படிப் பகிர்ந்துகொள்வது என்று கேட்க ஆரம்பித்தார்கள்.
ஸ்டீவ் சென், சாட் ஹர்லி மற்றும் ஜாவேத் கரீம் (Steve Chen, Chad Hurley and Javed Karim) ஆகிய மூவரும் பே பால் (Pay Pal) ஊழியர்கள். கணினியியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள். ஏதேனும் புதுமை செய்து உலகைத் திரும்பிப்பார்க்க வைக்க வேண்டும் எனும் வேட்கை கொண்டவர்கள். 2005ம் ஆண்டின் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது, மிகவும் மகிழ்வாக அவர்கள் நடனமாடி, பாட்டுப்பாடி, அதனை வீடியோ ரெக்கார்டரில் பதிவு செய்திருந்தார்கள்.

பார்ட்டி முடிந்து அந்த வீடியோவைப் பார்த்தபோது அவர்களுக்கு மிகவும் மகிழ்வாக இருந்தது. இந்த வீடியோவை உலகெங்கிலும் உள்ள நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தார்கள். வீடியோவைப் பகிர்வதெல்லாம் அப்போது பெருங்கனவாக இருந்ததே ஒழியத் தீர்வு ஏதும் கண்டறியப்பட்டிருக்கவில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!