கடந்த ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி காஸாவில் போர் ஆரம்பித்தது. இன்று வரை சொல்லொணாத் துயரங்கள் அந்த மக்களைச் சூழ்ந்துள்ளன. சூழலைப் புரிந்துகொண்ட சில நாடுகள் தொடர்ந்து தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றன. அவற்றில் ஐக்கிய எமிரேட்ஸும் அடங்கும்.
நவம்பர் ஐந்தாம் தேதி, அதாவது போர் ஆரம்பித்த ஒரு மாதத்தில் அபுதாபி அரசர் ஷேக் நஹ்யானும் துபாய் அரசர் ஷேக் முஹம்மதும், காஸா மக்களுக்கு உதவச் சில முடிவுகளை எடுத்தார்கள். சிவால்ரஸ் நைட் 3 (Chivalrous Knight 3) ஆப்ரேஷன் மற்றும் கேலண்ட் நைட் 3(Gallant Knight 3) ஆப்ரேஷன் என்று பெயரையும் சூட்டினார்கள்.
இந்த ஆப்ரேஷன்கள் மூலம் கேன்சரால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு அபுதாபியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அவர்கள் பெற்றோர்களுடன் அங்கு தங்குவதற்குப் பாதுகாப்பான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அங்கிருந்து அழைத்து வந்த சில மாணவிகளுக்குக் கல்லூரி வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன. இது போன்ற பல களச் செயல்கள், அரசர்களின் நேரடிப் பார்வையில் நடந்து வருகின்றன.
Add Comment