Home » G இன்றி அமையாது உலகு – 15
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 15

15. திறன்பேசியியல்

இணையம் பரவலாயிற்று. இணையத் தேடலும் அத்தியாவசியமாகிவிட்டது. திறன்பேசிகள் அறிமுகமாகியிருந்த காலம். கைப்பேசியில் இணையம் உபயோகிக்கலாம் என்ற அறிவிப்புகள் வந்தனவே ஒழிய, கணினியில் இணையம் கொடுத்த அனுபவத்தை அலைப்பேசியில் முழுமையாக வழங்க முடியாமல் நிறுவனங்கள் தவித்துக்கொண்டிருந்தன.

2007 செப்டம்பரில் ஆப்பிள் தனது முதல் ஐஃபோனை அறிமுகப்படுத்தியது. அந்த அறிவிப்பு வந்தவுடனேயே அதன் மீதான ஆர்வம் பயனர்களைத் தொற்றிக்கொண்டது. அதன் முதல் நாள் அறிமுக விற்பனையின்போதே முதல் நாள் இரவிலிருந்தே வரிசையில் காத்திருந்தவர்களின் புகைப்படங்கள் தலைப்புச் செய்திகளாகியிருந்தன.

காத்திருப்புக்கு ஏற்றவாறே அதன் பயன்பாடும், புதிய அனுபவமும் உலகெங்கிலும் புதிய பரபரப்பைத் தொற்றிக்கொள்ளச் செய்திருந்தது. கையில் வந்த உலகம் என்று தொழில்நுட்பப் பத்திகள் அதனைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடின. மிகச்சரியாக கைப்பேசிகளின் புரட்சிக்காலம் அப்போதுதான் தொடங்கியது. ஆனாலும் அதன் விலை சாமானியர்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது. ஆப்பிள் ஐஃபோன் சிறந்தது, ஆனால் ஏழைகள் இன்னுமொரு தக்காளிக்குக் காத்திருக்க வேண்டும் என்ற நிலைதான் அன்றிருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!