Home » உதயநிதியும் உலக நியதியும்
தமிழ்நாடு

உதயநிதியும் உலக நியதியும்

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவாரா?. தமிழக அரசியல் களத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாக இன்றைக்கு இதுதான் விவாதிக்கப்படுகிறது. விடை மிகவும் எளிமையானது.

சினிமாவில் நடிப்பீர்களா என்றதற்கு வாய்ப்பேயில்லை என்றார். நடித்தார். அரசியலுக்கு வருவீர்களா எனக் கேட்டதற்கு அமைதியாக விலகிச் சென்றார். அரசியலுக்கு வந்து சட்டப்பேரவை உறுப்பினரானார். அமைச்சராவீர்களா என்ற வினாவிற்குத் தலைவர் முடிவு செய்வார் என்றார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரானார். துணை முதல்வர் அல்லது முதல்வராவீர்களா என்ற கேள்விகளுக்கு இனி உதயநிதியிடம் பதில் கேட்க வேண்டிய தேவை நிச்சயம் இருக்காது. அதற்கான சரியான பதிலை எழுதிவைத்து விட்டு காலம் காத்திருக்கிறது. வெகு விரைவில் அமைச்சரவையில் மாற்றங்கள் நிகழும் எனவும் உதயநிதி துணை முதல்வராகிறார் எனவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிடத் தொடங்கி விட்டன.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி தொடங்கப்பட்டு 44 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதன் தற்போதைய செயலாளராக உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். தன் தந்தை ஸ்டாலின் பொறுப்பேற்று வழி நடத்திய இளைஞரணிக்குத் தலைவரானதுதான் உதயநிதியின் அதிகாரப்பூர்வமான அரசியல் எண்ட்ரி. அது வரை அரசியலுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்னும் பதிலைத்தான் கிளிப்பிள்ளையாகச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் அவருடைய அரசியல் எதிர்காலம் கவனமாகக் கட்டமைக்கப்படுகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!