ரீஸ்டார்ட் – டிஜிட்டல் உலகின் சர்வரோக நிவாரணி. கம்ப்யூட்டரில் ஏதேனும் பிரச்னை என்றால், “ஒரு தடவ ரீஸ்டார்ட் செஞ்சு பாருங்களேன்…” என்பதுதான் வழக்கமாகச் சொல்லப்படும் அறிவுரை. ஆனால் இப்போது இம்மருந்தே பிணியாகியுள்ளது.
உலகெங்கும் இருக்கும் கம்ப்யூட்டர்கள்… திருத்தம்… விண்டோஸ் கம்ப்யூட்டர்கள் தானாகவே ரீஸ்டார்ட் ஆகத்தொடங்கின. இயங்க இயலா நிலைக்குச் சென்றன. இதை “ப்ரிக்ட்” (bricked) என்கிறார்கள். அதாவது உங்கள் கம்ப்யூட்டர் பயனற்றுப்போய் ஒரு செங்கல்போல ஆகிவிடுவது.
ஒன்றல்ல, இரண்டல்ல….. பல்லாயிரக்கணக்கான கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விமான நிலையங்கள், மருத்துவ மனைவகள், அரசு அலுவலகங்கள் என அத்தியாவசியத் தேவைகள் முடங்கிப்போயின. எங்கெங்கும் ஒரு நீலத்திரை விரிந்து டிஜிட்டல் உலகையே சில மணி நேரங்கள் முடக்கிப் போட்டது. இதுவரை நிகழ்ந்த ஷட்டவுன்களிலேயே இது தான் மிகப் பெரியது. நமக்கு கோவிட் லாக்டவுன் போல, டிஜிட்டலுக்கு இந்தச் ஷட்டவுன்.
Add Comment