Home » ஒரு பூனை முக டிராகுலாவின் கதை
சமூகம்

ஒரு பூனை முக டிராகுலாவின் கதை

தொலைக்காட்சி என்றால் ஒரு காலத்தில் தூர்தர்ஷன் மட்டும்தான். அது போல கார்ட்டூன் என்றால் மிக்கி மவுஸ். வால்ட் டிஸ்னியின் வார்ப்பு. பின்னர் டிஸ்னி எவ்வளவோ கார்ட்டூன் கேரக்ட்டர்களை உருவாக்கித் தள்ளிவிட்டது. அதற்கு மூல காரணம் மிக்கி மவுஸுக்குக் கிடைத்த உலகளாவிய ஏற்பு.

கவிழ்த்து வைத்த பானைக் காதுகள், கருவண்டை ஒட்டி வைத்த மூக்கு, வடைச்சட்டி போன்ற வாய் கொண்டு வரையப்பட்ட முகத்தைக் காட்டினால் உலகில் 97% பேர் அது ‘மிக்கி மவுஸ்’ என்று சரியாக அடையாளம் காட்டுகின்றனராம். இது சாண்ட்டா கிளாஸை அறிந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்கின்றன புள்ளி விவரங்கள்.

மிக்கி மவுஸின் கையில் நான்கு விரல்கள்தாம். அதற்குக் கையுறை போடப்பட்டிருக்கும். அதை இறுக மூடி முஷ்டியைக் காண்பிப்பது போன்ற பித்தான்களை அணிந்தபடி வேலை பார்க்கின்றனர் டிஸ்னிலாண்ட் ஊழியர்கள். காரணம்? குறைந்த ஊதியம்!

‘உலகின் மிக மகிழ்ச்சியான இடமாக’ கருதப்படுகிறது டிஸ்னி லேண்ட். குழந்தைகள் மட்டுமில்லாமல் இளைஞர்கள், முதியவர்கள் என எல்லா வயதினரையும் வசீகரிக்கும் பிரம்மாண்டமான கனவுக் கோட்டை அது. கலிஃபோர்னியா மாகாணத்தில் ஐந்நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் டிஸ்னிலேண்ட் இரண்டு தீம் பார்க்குகள், மூன்று ஹோட்டல்கள், பெரிய ஷாப்பிங்க் மற்றும் பொழுதுபோக்கு வளாகங்களை உள்ளடக்கியது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்