Home » உடைபடும் பிம்பங்கள்
இந்தியா

உடைபடும் பிம்பங்கள்

2024ஆம் ஆண்டின் இந்திய பட்ஜெட் ஜூலை 23ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. யாரும் செய்யாத சாதனையாக ஏழாவது முறையாக நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். எத்தனை முறை அவர் பட்ஜெட் தாக்கல் செய்தார் என்பதையெல்லாம் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. மக்கள் மத்தியில் அவை என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை ஆராய வேண்டியது நமது கடமை. இந்த பட்ஜெட்டில் மாநில அரசுக்கும் பொதுமக்களுக்கும் என்னவெல்லாம் சாதக பாதகங்கள் நடந்திருக்கிறது எனத் தெரிந்துகொள்ள வேண்டியதும் அவசியமானது.

ஆந்திராவுக்கும் பீகாருக்கும், சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென்பது அந்த இரு மாநில முதல்வர்களின் கோரிக்கையாக இருந்தது. ஆனால் அந்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு தாராள நிதி உதவியை அளிக்க மத்திய அரசு முன்வந்துள்ளது. எதிர்பார்த்ததைப் போலவே மைனாரிட்டி அரசாங்கத்தைத் தாங்கிப் பிடிக்கும் ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்குச் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 26000 கோடியும், ஆந்திரத் தலைநகர் அமராவதியின் வளர்ச்சிப் பணிகளுக்காக 15000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன. தங்களது நாற்காலியைக் காப்பாற்ற முயற்சிக்கும் பட்ஜெட் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்திருக்கிறார்.

மத்திய அரசின் நிதியை எதிர்பார்த்து ஒத்திவைக்கப்பட்டிருந்த ஆந்திர மாநில அரசின் பட்ஜெட் இனி விரைவில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

பாஜக ஆட்சி செய்யாத மாநில அரசுகளின் நலனை மத்திய நிதியமைச்சர் கணக்கிலேயே எடுத்துக்கொள்ளவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. 82 நிமிடங்கள் நீண்ட அவரது பட்ஜெட் பேச்சில் இந்த மாநிலங்களின் பெயர்களைக்கூட உச்சரிக்க அவருக்கு நேரமிருக்கவில்லை என்பது அந்தக் குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கிறது. மாநிலங்களின் பெயர்கள் உரையில் இடம்பெறாதது தற்செயல் நிகழ்வு எனக் கடந்து போயிருக்கிறார். வாக்குகள் வராவிட்டால் வள்ளுவரும் தள்ளுபடிக்கு உள்ளாவார் என்பதை நிரூபித்திருக்கிறது தமிழகத்தைச் சார்ந்த மத்திய நிதியமைச்சரின் உரை. வாக்குகளை வாங்கித்தராத ஜெய்ஸ்ரீராம் முழக்கம் புறக்கணிக்கப்பட்டதும் வாக்குகளை வாரி வழங்கிய ஒடிஷா மக்களுக்காக ஜெய் ஜெகன்னாத் எனும் முழக்கம் ஓங்கி ஒலித்ததும் இங்கு வரலாறு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!