Home » ஒரு கூட்டணி; ஆயிரத்து நூறு வேட்பாளர்கள்!
இன்குபேட்டர்

ஒரு கூட்டணி; ஆயிரத்து நூறு வேட்பாளர்கள்!

எறும்பு மிகவும் சிறிய ஒரு உயிரினம். எறும்புகள் தனியாகச் சுற்றித் திரிவதில்லை. எப்போதும் ஒரு கூட்டமாகவே செயற்படுவதை நாம் அவதனிக்கலாம். எறும்புகள் இரை தேடிச் செல்லும் பாதையில் ஒரு இடைவெளி இருந்தால் அவை ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஏறி ஒரு பாலத்தையே அமைக்கும் திறன் கொண்டவை. அப்படி அமைக்கப் பட்ட பாலத்தின் மேலேறிப் பின்னால் வரும் எறும்புகள், இரையிருக்கும் இடத்தை நோக்கிச் செல்லும். கூட்டமாகச் செயற்படுவதை நிர்வகிப்பதற்குத் தலைமைப் பதவியுடன் ஒரு எறும்பும் நின்று வழி காட்டுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இப்படித் தனியாகவும் கூட்டமாகவும் தமது தேவையைப் பூர்த்தி செய்யும் இயற்கையான கட்டமைப்புக் கொண்ட உயிரினம் எறும்பு.

தேனீக்களும் எறும்புகளைப் போலவே கூட்டமாகச் செயற்படும் உயிரினமாகும். பறவைகள் கூட ஒரு கூட்டமாகப் பறந்து செல்லும் போது ஒரு ஒழுங்கு முறையினைப் பின்பற்றுவதைக் காணலாம். மீன்கள், பலவகையான பூச்சிகள் என்று பல உயிரினங்கள் திரளாகச் செயல்படும் திறன் கொண்டவையாகக் காணப் படுகின்றன. திரளாக அப்படிச் செயற்பட வேண்டும் என்று யாரும் பயிற்றுவிக்கவில்லை. இந்தக் கூட்டச் செயற்பாடு ஒரு இயற்கையின் விந்தையான படைப்பே.

இவை எப்படிச் செயற்படுகின்றன? அதை நாம் எமது தேவைக்குப் பயன்படுத்தலாமா? எனும் கேள்விகளின் பதிலே ஸ்வார்ம் ரோபோட்டிக்ஸ் (Swarm Robotics) எனும் துறை. அதாவது எறும்புகளைப் போலப் பல சிறிய ரோபோட்களை ஒன்றாகச் செயல் பட வைப்பதன் மூலம் நமக்குத் தேவையான காரியங்களைச் செய்ய வைப்பது. முக்கியமாக மனிதர்களால் போக முடியாத ஆபத்தான இடங்களில் செயல்படுவதற்கு இவை பயன்படலாம். சிறிய ரோபோக்களைத் தயாரிக்கலாம். ஆனால் அவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு சுயமாகவும் ஒரு கூட்டமாகவும் இயங்க வேண்டும். அவற்றை இயக்குவதற்குத் தலைமைத்துவம் இருக்காது. சூழல் மற்றும் சக ரோபோக்களை அறிந்து அதற்கேற்பச் செயல்படும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். அதற்கான நுண்ணறிவும் இந்த ரோபோட்களுக்கு இருக்க வேண்டும். இந்தத் திரள் நுண்ணறிவை ஆங்கிலத்தில் ஸ்வார்ம் இண்டெலிஜென்ஸ் (Swarm Intelligence) என்றழைப்பார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்