Home » இங்கிலாந்தில் வதந்தித் தீ
உலகம்

இங்கிலாந்தில் வதந்தித் தீ

சவுத்போர்ட் என்பது வடமேற்கு இங்கிலாந்தில் கடற்கரையோடு உள்ள ஒரு நகரம். அங்கு சென்ற வாரம் 29 ஜூலை திங்கள் கிழமை அன்று ஒரு நடனப் பள்ளியில் ஒரு நிகழ்வு. பல சிறுவர்கள் அந்நிகழ்வில் பங்கேற்றனர். அங்கு வந்த பதினேழு வயதான ஒருவன், அந்நிகழ்வுக்கு வந்திருந்தவர்கள் மீது கத்தியினால் தாக்குதல் நடத்தினான். இது பற்றிய போலிஸுக்கான அழைப்பு மதிய நேரத்துக்குப் பத்து நிமிடங்கள் முன்னதாக வந்ததாகச் செய்தி அறிக்கைகள் கூறுகின்றன.

இந்தத் தாக்குதலை நடத்தியவனின் விவரங்களைப் போலிஸார் பின்னர் வெளியிட்டனர். அவனது பெயர் அக்ஸெல் முகன்வா ருடகுபானா. பிறந்த இடம் கார்டிஃப் நகரம். இவனது பெற்றோர்கள் ருவாண்டா நாட்டிலிருந்து வந்து பிரித்தானியாவில் குடியேறியவர்கள். குடும்பப் பூர்வீகம் ருவாண்டாவாக இருந்தாலும் அக்ஸெல் பிறந்து வளர்ந்தது முழுவதும் பிரித்தானியாவிலேயே.

இந்தக் கத்தித் தாக்குதலில் பலர் காயமுற்றனர். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக மூன்று சிறுமிகள் உயிரிழந்தனர். இந்தச் சிறுமிகளின் வயது ஆறு, ஏழு, ஒன்பது என்று செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. இவர்களின் உயிரிழப்பு நாடு முழுவதையும் துயரத்தில் ஆழ்த்தியது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!