Home » உரு – 17
உரு தொடரும்

உரு – 17

மலேசிய விருது பெறும் முத்து நெடுமாறன்

17 செல்லினம்

2004ஆம் ஆண்டில் ‘அனைத்துலக அரங்கில் தமிழ்’ என்ற பொருளில் சிங்கப்பூரில் மாநாடு நடந்தது. நடிப்பு பற்றி கமல், இயக்கம் பற்றி பாலசந்தர், நடனம் பற்றி பத்மா சுப்ரமணியம் எல்லாம் உரையாற்றினர். அதில் தொழில்நுட்பம் பற்றி உரையாற்ற முத்துவை அழைத்திருந்தார்கள். அவர் உரை முடியும்போது கடைசியாக வானொலிக்குக் குறுஞ்செய்தி அனுப்பும் திட்டம் பற்றியும் குறிப்பிட்டார். செல்பேசியில் தமிழ் செயல்படும் விதம் விளக்கக்காட்சியாகப் பெரிய திரையில் காண்பிக்கப்பட்டது. மக்கள் தங்கள் மகிழ்ச்சியைப் பெரும் ஆரவாரம் எழுப்பித் தெரிவித்தனர்.

கூட்டத்தில் ஒருவர் தன்னுடைய பழைய மாடல் செல்பேசியைக் காண்பித்து, “இதில் கூட தமிழ் வேலை செய்யுமா?” என்று கேட்டார். ஜாவா மென்பொருள் இருந்தால்தான் வேலை செய்யும் எனச் சொல்லி இருக்கலாம். முத்து தன் வழக்கப்படி ஒரு சிட்டிகை குறும்பு சேர்த்து, “இது தமிழ்!!! சாதாரணப் பேசியில் எல்லாம் வேலை செய்யாது” என்று கட்டபொம்மன் ஆங்கிலேயத் துரைக்குப் பதில் சொல்லிய தொனியில் சொன்னார். கூட்டத்தில் கரவொலி அடங்க வெகுநேரம் ஆனது. முத்து, இப்படிச் செல்லுமிடமெல்லாம் செல்பேசியில் தமிழ் என்கிற செய்தியைப் பரப்பினார்.

சிங்கப்பூரில் ஜே (ஜெயந்தி) முத்துவுடன் இணைந்து நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்தார். ஒலி வானொலி நிகழ்ச்சிக்கு நிதி ஆதரவு பெற்றுத் தருவதிலிருந்து விளம்பரப் பணிகள் வரை அனைத்திலும் ஏகப்பட்ட வேலைகளைச் செய்தார். நோக்கியா முதல் இடத்தில் இருந்தாலும் இதில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. அடுத்த இடத்தில் இருந்த சோனி எரிக்சன் நிறுவனத்தை அணுகினார்கள். அவர்களுக்கு இந்த யோசனை பிடித்துவிட்டது. அடுத்ததாக நீல நிறத்தில் சோனி எரிக்சன் செல்பேசி வெளியிட இருந்தார்கள். ஆசியர்களுக்கு அதுவும் இந்தியர்களுக்குப் பிடித்த நிறம் . அதில் இதைச் செய்துவிடலாம் என்று உறுதியளித்தனர். வானொலி நிகழ்ச்சி, விளம்பரங்கள், விழா அனைத்துக்கும் நிதி கொடுப்பதாக ஒப்புக் கொண்டனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்