Home » அக்னிபாத் : எங்கே செல்லும் இந்தப் பாதை?
இந்தியா

அக்னிபாத் : எங்கே செல்லும் இந்தப் பாதை?

2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசால் அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய இராணுவத்தின் முப்படைகளிலும் இளைஞர்கள் குறுகிய காலமாக ஒப்பந்த முறையில் பணியில் சேர்வதற்கான திட்டம் இது. இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் ‘அக்னி வீரர்கள்’ என அழைக்கப்படுவார்கள். இந்தத் திட்டத்தின் மூலமாகப் படைகளில் சேரும் இளைஞர்கள் அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் வரை பணி செய்யலாம். முதல் ஆண்டில் 30 ஆயிரமாக இருக்கும் அவர்களது ஊதியம் இறுதி ஆண்டில் 40 ஆயிரம் வரை வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் 30 சதவிகிதம் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு நான்காம் ஆண்டின் இறுதியில் தொகுப்பூதியமாக வழங்கப்படும். அதன் மொத்த மதிப்பு 11.71 இலட்சம். இந்த தொகுப்பூதியத்திற்கு வரிவிலக்கும் உண்டு.

17.5 முதல் 21 வயதுள்ள இளைஞர்கள் இந்தத் திட்டத்தில் சேரலாம். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திறன் மதிப்பீட்டின் அடிப்படையில் அக்னிபாத் திட்டத்தில் பணி செய்த 25 சதவிகித படை வீரர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். மொத்தமுள்ள நான்கு ஆண்டுகளில் முதல் ஆறு மாதங்கள் பயிற்சி காலமாக இருக்கும். இராணுவ அதிகாரிகளுக்குக் கீழுள்ள பணியிடங்கள் மட்டுமே இந்த அக்னிபாத் திட்டத்தின் மூலமாக நிரப்பப்படும். அதன்படி ஆண்டுக்கு 40 முதல் 50 ஆயிரம் பணியிடங்கள் பூர்த்திசெய்யப்படும்.

இந்தத் திட்டத்தில் சேர்வதற்குக் குறைந்தபட்சமாக பத்தாம் வகுப்பை முடித்திருக்க வேண்டும். அக்னிபாத் திட்டத்தில் பணிபுரியும் காலத்தில் ஒருவர் இறக்க நேர்ந்தால் ஒரு கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும். அவர் கணக்கில் அதுவரை இருக்கும் சேவை நிதியும் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும். பணிக்காலத்தில் விபத்து நேர்ந்தால் உடல் ஊனத்தின் தீவிரத்தைப் பொறுத்து 46 இலட்சம் ரூபாய் வரை இழப்பீடாக வழங்கப்படும். அதுவரை இருக்கும் சேவை நிதி வட்டியுடன் வழங்கப்படுவதோடு மீதமிருக்கும் பணிக்காலத்திற்கான ஊதியமும் முழுமையாக வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் மூலமாகப் பணி நிறைவு செய்பவர்களுக்கு மத்திய பாதுகாப்பு மற்றும் உள்துறையில் உள்ள பணியிடங்களில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்