Home » ஒரு வரைபடத் திருட்டு வழக்கு
இந்தியா

ஒரு வரைபடத் திருட்டு வழக்கு

இந்தியாவின் பிரபல டிஜிட்டல் மேப்பிங் சேவை நிறுவனமான மேப் மை இந்தியா (Map My India), தனது தரவுகளைத் திருடி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம், ஓலா மேப்ஸ் என்கிற புதிய மேப்பிங் சேவையை உருவாக்கிக்கொண்டுள்ளதாகவும், தங்களுடன் செய்துகொண்ட உரிம ஒப்பந்தத்தை மீறியதாகவும் வழக்கு தொடர்ந்துள்ளது. உண்மையில் ஓலா செய்தது என்ன..? ஏதற்காக இந்தத் திருட்டு வழக்கு..?

கடந்த மாதம் வரையிலுமே (ஜூன் 2024) தன்னுடைய பயணங்களுக்கு கூகுள் மேப்களைப் பயன்படுத்தி வந்தது ஓலா. இந்த மாதத் தொடக்கத்தில், கூகுள் மேப்களிலிருந்து வெளியேறி தாங்களே உருவாக்கிய ஓலா மேப்களைப் பயன்படுத்தப் போவதாக அந்நிறுவனம் அறிவித்தபோது அது நுட்ப உலகில் பலருடைய புருவங்களை உயர்த்தச்செய்தது.

அப்போது, ஓலா கேப்ஸ் நிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் வெளியிட்டிருந்த பதிவில், “கூகுள் மேப்ஸிற்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.100 கோடி செலவழித்து வந்தோம். ஆனால் தற்போது எங்களுடைய சொந்த ஓலா வரைபடத்திற்கு மாறி விட்டோம். இந்தச் செலவு இனிமேல் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ஓலா மேப்ஸில் பல்வேறு புதிய வசதிகள் கொண்டு வரப் போவதாகவும் குறிப்பாக தாங்கள் உருவாக்கி இருக்கக்கூடிய இந்த ஓலா மேப்ஸை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் (Open Source) என்றும், அதில் ஏதேனும் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என விரும்பினால் அதைத் தெரிவிக்கலாம் என்றும் பல்வேறு சிக்சர்களை விளாசியிருந்தார் பவிஷ்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்