Home » G இன்றி அமையாது உலகு – 18
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 18

18. ஜெமினி

2022 நவம்பரில் ஓப்பன் ஏஐ சாடி ஜிபிடியை அறிமுகப்படுத்தியபோது அது நுட்ப உலகில் பெரும் அதிர்வுகளைக் கொண்டு வந்தது. செயற்கை நுண்ணறிவைப் பொதுப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்ததில் மிகப் பெரிய பாய்ச்சலாகவும் அது கருதப்பட்டது. சாட் ஜிபிடிக்கான பயனர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், குறுகிய காலத்தில் புகழேணியில் ஏறிவந்துகொண்டிருந்த அதன் பயன் மதிப்பும், கூகுளுக்கும், கூகுள் தேடுபொறிக்கும் விடப்பட்ட மிகப்பெரிய சவாலாக இருந்தது.

கூகுள் முன்னெப்போதும் இல்லாத வகையில் தொழில் நுட்பத் தலைமைப் பிரிவில் இருந்த அனைவருக்கும் `கோட் ரெட் அலர்ட்` அனுப்பியது. அதாவது உடனடியாக, அவசர கதியில் சரிசெய்ய வேண்டிய பகுதியாகக் கூகுள் சர்ச்சின் மேம்படுத்தப்பட்ட நிரல் மொழியை உருவாக்கிச் சேர்ப்பது. செயற்கை நுண்ணறிவுத் தளத்தில் கூகுளின் பிரதிநிதித்துவத்தை அதிவேகமாக உருவாக்குவது. இவ்விரண்டையும் முன்னிறுத்தி கூகுள் செயல்படத் தொடங்கியது.

ஆல்ஃபபெட் என்னும் தாய் நிறுவனத்தைத் தொடங்கிய பிறகு கூகுளின் நிர்வாகத்தை முற்றிலுமாக சுந்தர் பிச்சை தலைமையிலான நிர்வாகக்குழுவிடம் வழங்கிவிட்டனர் லாரியும், செர்கேயும். ஆனால் சாட் ஜிபிடியின் வரவு அவர்களையும் பதற்றப்படுத்தியிருந்தது. அத்தனை வருடங்கள் இல்லாத புது மாதிரியாய், அவர்கள் நிறுவனத்தின் ஆலோசனைக் கூட்டங்களுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து விவாதங்கள் நடந்தன. செர்கே 2022ல் கூகுளின் நிரல் மாதிரியின் முழு வடிவத்தையும் நுட்பத்தலைமையிடம் கேட்டுவாங்கிக்கொண்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. இப்படி கூகுள் அதற்கு முன்பு பதற்றமடைந்ததில்லை என்றும் இத்தனை வருடமாக அது எழுப்பி வைத்திருந்த கண்ணாடி மாளிகைக்குள் ஓப்பன் ஏஐ கல்லெறிந்திருக்கிறதென்றும் அது தன் தலைப்புச் செய்தியில் விவரித்திருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!