கூகுள் மிகப்பெரும் பொருட்செலவில் தனது செயலிகளைப் பிரபல அலைபேசிகளில் வலுக்கட்டாயமாகத் திணித்ததாக ஒரு வழக்கு தொடரப்பட்டிருந்தது. தேடுபொறி மற்றும் விளம்பரங்களில் வெகு பிரத்தியேகமாகத் தன்னை முன்னிறுத்தும் விதமாகக் கூகுள் செயல்பட்டது என்பது குற்றச்சாட்டு.
கிட்டத்தட்ட பத்து மாதங்கள் நடந்த இந்த முக்கியமான வழக்கில், கூகுள் சி.ஈ.ஓ (தலைமைச் செயல் அதிகாரி) சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் சி.ஈ.ஓ சத்யா நாதெள்ளா உள்ளிட்டோர் சேர்க்கப் பட்டிருந்தனர். பிரபல மொபைல் நிறுவனங்களோடு இது தொடர்பாகக் கூகுள் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இப்போது அதில் கூகுளுக்கு எதிராகத் தீர்ப்பு வந்திருக்கிறது. கூகுள் ஏகபோகவாதியாக (Monopoly) செயல்பட்டது என்றிருக்கிறது நீதிமன்றம்.
எந்த ஒரு புதிய கைபேசி தயாரிக்கப்பட்டாலும், அதில் முதன்மையான இணைய உலாவியாகக் கூகுள் க்ரோம் இருக்க வேண்டும். தேடுபொறியென்றால் கூகுள் சர்ச். மேலும் வரிவிளம்பரங்கள் எனப்படும் AdWords சார்ந்து பொருத்தமான விளம்பரங்களைக் காண்பிப்பதிலும் பாகுபாடு செய்வது. அதன்மூலமாக பெரும் வருவாயைப் பெருக்கிக்கொண்டது. இப்படித் தயாரிப்பின்போதே தங்களது செயலிகளை உள்ளிட்டுத் தருவதன் வாயிலாகப் பயனர்களுக்கு வேறு உலாவிகளையோ, செயலிகளையோ பயன்படுத்த வாய்ப்புத் தராது ஒரு சர்வவல்லமை பொருந்திய எதேச்சாதிகாரத்தைக் கூகுள் தயாரிப்பு நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு செய்து வந்திருக்கிறது என்பது குற்றச்சாட்டுகளின் விரிவாக்கம்.
windows மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருள்தானே! அப்படி இருக்க, அதனுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? எங்கோ இடிக்கிறது. ஒருவேளை ஐ.பி.எம். நிறுவனமாக இருக்குமோ?