Home » ஒரு குடும்பக் கதை – 117
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 117

117. முந்த்ரா ஊழல்

ஹரிதாஸ் முந்த்ரா. கல்கத்தாவைச் சேர்ந்த வியாபாரக் குடும்பம். மின்சார பல்ப் வியாபாரத்தில் தொடங்கி, ஸ்டாக் மார்க்கெட்டில் நுழைந்து “சர்குலர் டிரேடிங்” என்ற தில்லுமுல்லு செய்து, படிப்படியாக தில்லுமுல்லுகளும், வியாபாரமும் வளர்ந்து 1950களில் நாலு கோடி சொத்துக்கு அதிபதி ஆகிவிட்டார்.

இது முந்த்ராவின் முன் கதைச் சுருக்கம்.

இந்த முந்த்ரா தொடர்பான ஊழல்தான், சுதந்திர இந்தியாவில் வெளிச்சத்துக்கு வந்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய முதல் பெரிய ஊழல்.

இந்த முந்த்ரா பல்வேறு கம்பெனிகளுக்குச் சொந்தக்காரர். அவற்றில் இங்கே குறிப்பிட வேண்டியவை ஆறு கம்பெனிகள். அவை, ரிச்சர்டுசன் அண்டு குருடாஸ், ஜெசோப்ஸ் எஞ்சினியரிங், ஸ்மித் ஸ்டானிஸ்டிரீட், ஆஸ்லர் லேம்ப்ஸ், அக்னலோ பிரதர்ஸ், பிரிடிஷ் இந்தியா கார்பரேஷன்.

இந்தக் கம்பெனிகளின் பங்குகள் அடி மட்ட விலையில் இருந்தன. அந்தப் பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தி, அதன் பின் அவற்றை விற்று லாபம் சம்பாதிக்கலாம் என நினைத்தார் முந்த்ரா. ஆனால், விலை ஏறுவதற்கான முகாந்திரம் ஏதுமில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்