Home » சாத்தானின் கடவுள் – 18
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 18

18. இல்லாத ஒன்றும் இருக்கும் இரண்டும்

இந்த உலகில் கடவுளைக்கூடக் கொஞ்சம் மெனக்கெட்டுத் தேடினால் பார்த்துவிடலாம். ஆனால் சாமானிய மனிதர்களால் கண்டுபிடிக்கவே முடியாத ஒரு விவகாரம் உண்டு. அதற்கு ஆன்மா அல்லது ஆத்மா என்று பெயர்.

மனிதன் என்றால் ஜீவாத்மா. கடவுளென்றால் பரமாத்மா. அது இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் ஆத்மா என்பது என்ன? எவனும் சொல்ல மாட்டான்.

ஆனால் கேட்டுப் பாருங்கள். உடல் – உயிர் – ஆன்மா என்பார்கள். உடல் நமக்குத் தெரியும். உயிரும் தெரியும். ஆக்ஸிஜன் உள்ளே சென்று வந்துகொண்டிருக்கும்வரை அது இருக்கும். போக்குவரத்து ரத்தானால் ஆட்டம் முடிந்தது. இறுதி மூச்சு வெளியேறிய பின்பு, உடலைத் தூக்கிப் போட்டு எரிக்கத்தான் வேண்டும். கட்டையை எரித்தால் கார்பன். காற்றுப் பகுதி அதனோடு போகும், சாம்பல் பகுதி மண்ணோடு போகும்.

சரி, எங்கேயாவது போகட்டும். இந்த உடலும் உயிரும் போகுமிடம் தெரிகிறது. அந்த ஆன்மா என்கிறார்களே, அது?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • “புழக்கத்தில் உள்ள மதங்களில் ஆன்மா என்ற ஒன்று இல்லை என்னும் மதம் பௌத்தம்தான்”. புழக்கத்தில் உள்ள மதங்களைப் பற்றிய ஞானம் இருந்தால்தான் இப்படிப்பட்ட வரியை அறுதியிட்டுக் கூறமுடியும். இவ்வாறு ஒவ்வொரு வரியின் பின்னும் கடும் உழைப்பும் ஆண்டாண்டு காலமாய்த் தாங்கள் சேகரித்து வைத்திருக்கும் கடவுளைப் பற்றிய, மதங்களைப் பற்றிய சிந்தனைகளும் மறைந்திருப்பதை உணர முடிகிறது.

    ஆன்மா என்ற ஒன்று இல்லை என்னும் வாதத்தை, அது தர்க்கப்பூர்வமானதாக இருந்தபோதிலும், ஜீரணிக்கக் கடினமாக உள்ளது.

    எனில், ஆன்மாவைப்பற்றி ரமணர், விவேகானந்தர், ஓஷோ போன்றோர் கூறியவற்றுக்கு அர்த்தமென்ன? ரமணரும், விவேகானந்தரும் மெய்ஞ்ஞானியர் இல்லையா? அவர்களும் மதங்கள் தோற்றுவித்த மாயையில் சிக்கிக்கொண்டவர்களா?

    இது பெரும் சிக்கலான விவாதமாகத் தோன்றுகிறதே.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!