Home » காணிக்கை
இலக்கியம் கதைகள்

காணிக்கை

விமலாதித்த மாமல்லன்


சாஸ்திரி பவன் மரநிழலில் நின்றிருந்த பழைய மெட்டடார் வேனில் ஏறி அமர்ந்ததும் எல்லாரும் ஏறியாச்சா என்று தமக்குத்தாமே சன்னமாக வாய்விட்டுக் கேட்டுக்கொண்டபடி உள்ளே இருந்த நான்கைந்து பேரையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்ட கிரிதர், மடியில் இருந்த தோள் பையை அனிச்சையாகத் தொட்டுப் பார்த்துக்கொண்டு, ‘போலாம்’ என்றதும் புறப்பட்ட வண்டி கேட்டருகில் வந்து நின்றது.

‘லெஃப்ட்டா ரைட்டா சார்’ என்றார் டிரைவர்.

டிஎஸ்பி சொல்லியிருந்த ஏரியாவை மனதிற்குள் எண்ணிப் பார்த்துக்கொண்டவர் லெஃப்ட் என்றார். வண்டி ஹாடோஸ் சாலையில் இறங்கியதும் பின்னால் நின்றுகொண்டிருந்த பழைய அம்பாசிடர் வலப்பக்கமாகத் திரும்பியது. அதில் ஆண்ட்ரூஸ் யுவராஜ் இருந்தார்.

குன்னூரில் இருந்து மாற்றலாகி, சமீபத்தில்தான் மெளன்ட்ரோடில் உள்ளொடுங்கியிருந்த கட்டடத்தின் மூன்றாவது மாடியில் இருந்த அந்த ஆபீசுக்கு வந்திருந்த யூடிசி நரஹரிக்கு ஆண்ட்ரூஸுடன்தான் முதலில் பரிச்சயம் ஏற்பட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்